Wednesday, November 18, 2015

தைப்பூசத்தில் பிறந்த பித்துக்குளி முருகதாஸ் கந்தசஷ்டியில் காலமான அதிசயம்!

சென்னை: பிரபல முருகபக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.கோவையில் 1920-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தவர் பித்துக்குளி முருகதாஸ். பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருகன் பக்தி பாடல்களை பாடியுள்ளார்.

அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று பக்தி இசைக் கச்சேரிகளையும் நடத்தி உள்ளார். முருகப் பெருமான் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள முருகதாஸ், திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். தியாகராஜர் விருது, சங்கீத சாம்ராட் உள்பட பல இசை விருதுகளை பெற்றுள்ள பித்துக்குளி முருகதாஸ், 1984-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூசத்தில் பிறந்து கந்தசஷ்டியில் மறைந்த அவரது முருக பக்தியை பக்தர்கள் வியந்து போற்றுகின்றனர்.
http://www.thinaboomi.com/2015/11/17/51271.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.