Wednesday, November 4, 2015

தமிழறிஞர் மற்றும் வழக்கறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை தமிழ் அருச்சனை பற்றி 1940-இல் கூறியது



அர்ச்சனைகளைத்  தமிழர்கள்  கோயில்களில்  தமிழிலேயே  நடத்த  ஏற்பாடு  செய்தல்  வேண்டும்.  பொருள்  விளங்காத  மொழியில்  இறைவனை  வாழ்த்துவதிலும்  தமிழில்  இறைவன்  பெயர்களைச்  சொல்லி  மலர்தூவிப்  போற்றுதலே  வழிபடுகின்றவர்களுக்கு  அன்பு  பயக்கும்.

‘ஓம்  கணபதயே  நம்’  என்பது  ‘கணபதிக்கு  வணக்கம்’  என்று  பொருள்படும்.  கணபதியின்  திருவடிவத்தை  முன்வைத்துக்கொண்டு  வடமொழியில்  படர்க்கையில்  ‘கணபதிக்கு  வணக்கம்’  என்று  சொல்வதைப்  பார்க்கிலும்  “ஓம்  கணபதியே  போற்றி”  என்று  முன்னிலையாகத்  தமிழில்  சொல்வதே  சிறந்ததாகும்.

சைவ  வைணவ  சமயப்  பெருந்தலைவர்கள்  தமிழிலேயே  இறைவனைத்.  துதித்திருகின்றார்கள்.  ஆதலால்  தமிழிலே  அர்ச்சனை  செய்தல்  கூடாது  என்றல்  பெருந்தவறாகும்.

நன்றி :- தமிழர் சமயம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.