Saturday, October 24, 2015

இலங்கையில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ரத்தம் – சதையாக மாறிய அப்பம்




இலங்கையில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ரத்தம் – சதையாக மாறிய அப்பம்


கொழும்பு, அக். 23–

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருப்பலி வழிபாட்டில் பயன்படுத்தும் அப்பம் இயேசுவின் சதையாக மாறுவதாக நம்புகின்றனர். இந்த அப்பம் நற்கருணை என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியாஸ்திரிகள் மடத்தில் வைக்கப்பட்டிருந்த நற்கருணை அப்பம் திடீரென ரத்தத்துடன் கூடிய சதையுமாக மாறிய அதிசயம் நிகழ்ந்தது. இதை கண்டு ஆச்சரியம் அடைந்த கன்னியாஸ்திரிகள், பரப்பாங் கண்டல் தேவாலய பாதிரியாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து சதையாக மாறிய அப்பத்தை பார்வையிட்ட பாதிரியார், அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இந்த செய்தி பொதுமக்களுக்கு தெரியவந்தது. அதை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மனிதனின் இதயம் போல காட்சி அளிக்கும் இந்த சதைத்துண்டில், அன்னை மரியா மற்றும் குழந்தை இயேசுவின் உருவங்கள் தெரிவதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

நன்றி :- மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.