Saturday, October 24, 2015

தில்லியில் எழுத்தாளர்கள் மெளன ஊர்வலம்




கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு மொழி எழுத்தாளர்கள் வாயில் கருப்புத் துணி அணிந்தும், கைகளில் பதாகைகளை ஏந்தியும் தில்லியில் வெள்ளிக்கிழமை மெüன ஊர்வலம் சென்றனர்.

 தில்லி சஃப்தர்ஹஸ்மி மார்கில் உள்ள ஸ்ரீராம் மையத்தில் இருந்து சாகித்ய அகாதெமி கட்டடம் அமைந்துள்ள பகுதி வரை இந்த மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஜன்வாதி லேக்கக் சங், லேக்கக் சங், சாகித்ய சன்வாத், ஜன்ஸ்க்ருதி மஞ்ச், தலித் லேக்கக் சங் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலர் பங்கேற்றனர்.

 ஊர்வலத்தில் வந்தவர்கள் பின்னர், எழுத்தாளர்களின் பேச்சு சுதந்திரத்தையும், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாக்கவும் சாகித்ய அகாதெமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தும் மனுவை அகாதெமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரியிடம் அளித்தனர்.
 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, விருதை திரும்பக் கொடுக்கும் எழுத்தாளர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாகித்ய அகாதெமிக்கு ஆதரவு தெரிவித்தும் எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் சாகித்ய அகாதெமியின் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 எழுத்தாளர்களில் இரு பிரிவினர் தனித்தனியாக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சாகித்ய அகாதெமி வளாகத்திலும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நன்றி  :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.