Tuesday, October 6, 2015

மூத்த பத்திரிகையாளர் நாத்திகம் பாலு (76) சென்னையில் நேற்று காலமார்.

நாத்திகம் பாலு

மூத்த பத்திரிகையாளர் நாத்திகம் பாலு (76) சென்னையில் நேற்று காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பத்திரிகையாளர் சங்கங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாத்திகம் பாலு, நேற்று காலை காலமானார். அவரது உடல், சென்னையை அடுத்த பெருங்களத் தூரில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. இன்று பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சேப் பாக்கத்தில் உள்ள சென்னை பத் திரிகையாளர் மன்றத்தில் அஞ்சலிக் காக உடல் வைக்கப்படுகிறது. பின்னர் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கிறது.
நாத்திகம் பாலு’ என்று அனை வராலும் அழைக்கப்பட்டவர் மூத்த பத்திரிகையாளர் எம்.பாலன். 1938-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி திருச்சி மலைக்கோட்டை அருகேயுள்ள ஆண்டாள் தெருவில் மாணிக்கம், சரோஜினி தம்பதிகளுக்கு இரண் டாவது மகனாக பிறந்தார். ‘நாத்திகம்’ பத்திரிகையில் தனது பணியைத் தொடங்கினார். நவசக்தி, தினச்செய்தி, கண்ணதாசனின் தென்றல், விடுதலை, அலை ஓசை, மக்கள் குரல், தினசரி, எதிரொலி என பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
பத்திரிகையாளர் சங்க நிர்வாகி யாக இருந்து, பத்திரிகையாளர்கள் உரிமைகளுக்காக பல போராட்டங் களை நடத்தி சிறை சென்றார். பெரியார், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஈ.வெ.கி.சம்பத், ஜி.கே.மூப்பனார்,வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற தலைவர்களுடன் நெருங் கிப் பழகியவர்.

நாத்திகம் பாலுவுடன் 42 ஆண்டு களாக பழகிய சக பத்திரிகையாள ரான விடுதலை இராதா கூறும்போது, ‘‘சிறந்த பத்திரிகையாளராகவும் சுயமரியாதை சிந்தனையாளராக வும் இருந்தவர் நாத்திகம் பாலு. பத்திரிகையாளர் உரிமைகளுக்காக சமரசமற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். ஏதாவது ஒரு செயலில் இறங்கிவிட்டால், அதற்கு தீர்வு கிடைக்கும்வரை சோர்வடையாமல் போராடும் குணம் கொண்டவர்.

அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, எழுத்தாளர் ஜெயகாந்தன்,பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி போன்றோர்களிடமும் மிக நெருக்கமாக பழகியவர். நிறைய புத்தகங்களைப் படிப்பார். ஓயாமல் எழுதிக்கொண்டே இருப்பார். நல்ல பேச்சாற்றலும் உடையவர். அவரது இழப்பு பத்திரிகை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு’’ என்றார்.

நாத்திகம் பாலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு ஆதரவாக வெளிவந்த நாத்திகம் நாளேட்டில் செய்தியாளராக பணியாற்றியவர் பாலு.காமராசர், ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கி யவர். அவரது மறைவு தேசிய இயக் கத்துக்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

நாத்திகம், நவசக்தி, அலைஓசை போன்ற பத்திரிகைகளில் திறம் பட பணியாற்றியவர் பாலு. பல ஆண்டுகள் மூத்த பத்திரிகையாள ராக, மற்றவர்களுக்கு வழிகாட்டி யாக இருந்தவர். காமராசர், மூப்ப னார் போன்ற தலைவர்களோடு நெருங்கிப் பழகி, கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்துகொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் பத்திரிகைத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய நாத்திகம் பாலு காலமான செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அரசியல் தலை வர்களுடன் நெருங்கிப் பழகியவர். இந்திய விடுதலைக்குப் பிந்தைய அனைத்து அரசியல் நிகழ்வு களையும் நேரில் பார்த்தவர். அவரது மறைவு பத்திரிகைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர். மேலும் அனைத்து பத்திரிகை யாளர் சங்கங்களும் நாத்திகம் பாலு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.