Tuesday, October 6, 2015

நடுவரசு தகவல் : கருப்புப் பணம் ரூ.4147/- கோடி

பகிரங்கப்படுத்தப்பட்ட கருப்புப் பணம் ரூ.4147 கோடி: மத்திய அரசு தகவல்

பதுக்கி வைத்திருக்கும், கருப்புப் பணம் குறித்த தகவலை பகிரங்கப்படுத்த மத்திய அரசு கொடுத்திருந்த 90 நாள் கால அவகாசத்தில், அதுகுறித்து 638 பேர் அறிவித்த தொகையின் மதிப்பு ரூ 4,147 கோடி என்று மறு மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. முன்னதாக, இந்தத் தொகை ரூ. 3,770 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 இதுகுறித்து மத்திய வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா தில்லியில் திங்கள்கிழமை கூறியதாவது: 

 கருப்புப் பணத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு 90 நாள் கால அவகாசம் கொடுத்து அதற்கென ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தாம் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைத் தாமாகவே முன்வந்து அறிவித்து, அதற்கான வரி மற்றும் அபராதம் செலுத்துபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த 90 நாள் காலக்கெடு கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. 

 அந்த அறிவிப்பையொட்டி கருப்புப் பணம் குறித்து 638 பேர் தாமாகவே முன்வந்து தகவல் அளித்தனர். இவர்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த தொகையின் மதிப்பு ரூ.4,147 கோடியாகும். இது முந்தைய மதிப்பீட்டில் 3,770 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பகிரங்கப்படுத்தப்பட்ட கருப்புப் பணத்துக்கு 30 சதவீதம் வரியும், 30 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 2,488.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று ஹஸ்முக் அதியா தெரிவித்தார்.
நன்றி ;:- தினமணி
 
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.