Sunday, October 11, 2015

வெல்டிங் தொழிலாளி சேமித்துள்ள 3 ஆயிரம் தபால்தலைகள் !


Image result for தபால்தலைகளுடன் குமாரசாமி

திருக்கழுக்குன்றம் பகுதியில் வெல்டிங் தொழில் செய்துவரும் ஒருவர், 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தபால் தலைகளை சேமித்துள்ளார். மேலும், அவற்றைப் பள்ளி மாணவர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்காட்சிகளையும் நடத்தி வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக் கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (45). வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர், ஆர்வம் காரணமாக அஞ்சல் துறை வெளியிடும் தபால் தலைகளை சேமித்து வருகிறார். இதில், 1948-ம் ஆண்டு வெளியிடப்பட்டு ஒன் றரை அணாவுக்கு விற்பனை செய் யப்பட்ட மகாத்மா காந்தியின் தபால் தலை முதல், தென்னாப்ரிக்காவில் இருந்து காந்தி திரும்பியதன் நினைவாக வெளியிடப்

தான் சேமித்து வைத்துள்ள தபால் தலைகளை, மாணவர்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் பல் வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று கண்காட்சி நடத்தி வருகிறார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: பள்ளியில் நடந்த சில கண்காட்சியை பார்த்து ரசித்தபோது, தபால்தலைகளை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளாக தபால்தலைகளை சேமித்து வருகிறேன். இதில், திருவிதாங்கூர் ராஜாவின் உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலைதான் மிகவும் பழமை வாய்ந்தது.

இந்த தபால்தலையின் அப் போதைய விலை 2 சக்கரம். திரு விதாங்கூர் ராஜாவின் ஆட்சி காலத்தில், பணத்தை சக்கரம் என்றே கூறுவார்கள். 28 சக்கரங்களுக்கு ஆங்கிலேயர் காலத்தின் மதிப்பு ரூ.1 தான். மகாத்மா காந்தியின் பழமையான தபால்தலைகளையும் வைத்துள்ளேன்.
மேலும், பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள பறவைகள், ரயில் இன்ஜின்கள், விலங்குகள் மற்றும் பூக்கள் உருவம் பொறித்த தபால்தலைகள் உள்ளன. இது தவிர, இந்தியா, துபாய், உகாண்டா, மலேசியா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஓமன், இங்கிலாந்து ஆகிய பல்வேறு நாடுகளின் தபால்தலைகளும் உள்ளன.

குறைந்தபட்சம் ஒன்றரை அணா முதல் அதிகபட்சம் ரூ.100 வரை விற்கப்பட்ட தபால்தலைகளை சேமித்து வைத்துள்ளேன். இந்தியா வின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அஞ்சல் அட்டைகளையும் சேமித்துள்ளேன். நா

பள்ளிகளில் கண்காட்சி

இவ்வாறு சேமித்துள்ள தபால் தலைகளை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அஞ்சல் அட்டை மற்றும் தபால் தலைகளை மாணவர்களின் கண்காட்சிக்கு வைத்துள்ளேன்.

நான் சேமித்துள்ள தபால் தலை களில் பூடானில் வெளியிடப்பட்ட தங்கமூலாம் பூசப்பட்ட தட்டின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையும், வெளிநாடுகளில் வெளி யிடப்பட்ட மகாத்மா காந்தியின் தபால்தலைகளும் தான் மாணவர் கள் மற்றும் பொதுமக்களை அதிகம் கவர்ந்தவை ஆகும். தொடர்ந்து தபால் தலைகளை சேமிக்கவே விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.