Tuesday, October 13, 2015

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நூலகத் துறை ஊழியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. படம்: ம.பிரபு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
 தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில்
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 
நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
படம்: ம.பிரபு

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங் களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.செல்வராசு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆ.செல்வராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன், உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நூலகர்கள் இதில் பங்கேற்றனர்.

முதுநிலை நூலக அறிவியல் பட்டம் பெற்ற அனைத்து நிலை நூலகர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். சுமார் 110 கிளை நூல கங்களில் 3-ம் நிலை நூலகர் பணியிடம் தோற்றுவிக்க வேண் டும். 3-ம் நிலை நூலகருக்குரிய கல்வித் தகுதிகளோடு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி புரிந்து வரும் ஊர்ப்புற நூலகர் களை 4-ம் நிலை நூலகர்கள் என பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800 என காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

காலியாக உள்ள பொது நூலக இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்களுக்கு நூலக அனுபவம் மற்றும் கல்வித் தகுதி உள்ளவர்களை நியமிக்க வேண்டும். காலியாக உள்ள 22 மாவட்ட நூலக அலுவலர்கள், 28 முதல்நிலை நூலகர்கள், 35-க்கும் மேற்பட்ட 2-ம் நிலை நூலகர்கள் பணியிடங்களை நிரப்ப தடையாக உள்ள உயர் நீதிமன்றத் தடையாணையை நீக்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கை களை அரசு நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் உண்ணாவிரதப் போராட் டத்தில் வலியுறுத்தப் பட்டது.

நன்றி :- தி இந்து


0 comments:

Post a Comment

Kindly post a comment.