சொத்து குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் தனிக்கோர்ட்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்நிலையில் தீர்ப்பு இறுதி இல்லை என்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. ஜெயலலிதா வழக்கில் வெற்றி பெற்று வெளிவருவார் என்றும் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
தீர்ப்பு இறுதியானது இல்லை. முதல்வர் ஜெயலலிதா தடைகளை சட்ட நடைமுறைகள் மூலம் உடைப்பார். என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். "ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அ.தி.மு.க. நல்லாட்சியை தொடரும்." என்று கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கழகம் போன்ற சிறிய அமைப்புகளும் இதே கருத்து மற்றும் ஒற்றுமையை தெரிவித்துள்ளன. இதற்கிடையே மாநிலத்தில் அ.தி.மு.க. கட்சியின் தொண்டர்கள் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் ஜோடிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். கடற்கரை மாவட்டமாக நாகையில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியை ஏற்றி வைத்துள்ளனர்.
நன்றி :- தினத்தந்தி
0 comments:
Post a Comment
Kindly post a comment.