ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனை பணித் திறன் சார்ந்த ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011-12, 2012-13-ஆம் நிதியாண்டுகளிலும் இதே அளவு ஊக்கத்தொகை ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
ரயில்வே ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவுக்கு முன்பு, பணித் திறன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். இதனால், கீழ்நிலை ரயில்வே ஊழியர்கள் 11 லட்சம் பேர் பயனடைவர். இதன் காரணமாக, அரசுக்கு ரூ.800 கோடி செலவாகும்.
தற்போது இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியாகியிருந்தாலும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும். அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி இருப்பதாலும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு உடல் நிலை சரியில்லாததாலும் இதற்கு ஒப்புதல் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனினும், இதற்கான உத்தரவை பின் தேதியிட்ட ஒப்புதலாக மத்திய அமைச்சரவையிடம் எடுத்துச் செல்லப்படவுள்ளது என ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.