Sunday, September 28, 2014

சகாயத்திற்கு நிகர் சகாயமே !



உ. சகாயம் (22-03-1964) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர். தாம் பணியாற்றிய மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளாலும் நேர்மையான அணுகுமுறைகளாலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டவர்.


பிறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாக பிறந்தவர்.

படிப்பு

பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சட்டப்படிப்பு என அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.

குடும்பம்

இல்லத்தரசியின் பெயர் விமலா. அருள் திலீபன் என்ற மகனும், யாழினி என்ற மகளும் உள்ளனர்.

பணிக் கொள்கை

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்பது அவரது தாரக மந்திரம் ஆகும். இந்த வாசகத்தை அவரது இருக்கையின் பின்புறம் காணலாம். இவரது இந்த கொள்கையின் காரணமாக, அவரது 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.[சான்று தேவை]

பதவிகள் - பொறுப்புகள்

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர்,

நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி,

திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி,

காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி,

திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர்,

கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்,

சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி,

தொழில் வணிகத்துறை இணை இயக்குநர்,

மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்,

நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்,

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்,

புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர்

மதுரை மாவட்ட ஆட்சியர்

கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர்

ஆகிய பணிகளை வகித்துள்ள இவர்

தற்பொழுது இவர் இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்

குறிப்பிடத்தக்க செயல்கள்

கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த போது அவரது அறையில் “If you have power, use it for the poor” - உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து. என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.

காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ.வாக இருந்த போது பெப்சி குளிர்பானத்தில் அழுக்குப்படலம் இருந்ததாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி அந்த ஆலைக்கு பூட்டு பூட்டினார்.

நாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்த போது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டு பரபரப்பேற்படுத்தினார்.(மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் கடனுதவித் திட்டம் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு , வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி என்பது இங்கு குறிப்பிடக்கூடியது.)[2]

மதுரை மாவட்ட ஆட்சியராக மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் காணப்பட்டது.

கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார்.

நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும் தொடுவானம் என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார். கிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்திருக்கிறார்.[3][4]

மதுரையில் ஆட்சியராக இருந்த போது அங்கே ஏதிலியர் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர்களுக்காக தையல் பயிற்சி அளித்து தையல் வேலை வாய்ப்பு, மற்றும் கணினி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதே போல ஊனமுற்றவர்களுக்கு ‘ஊன்று கோல் திட்டம்’, உழவர்களுக்காக ‘உழவன் உணவகம்’ திட்டம் ஆகியவற்றையும் சிறப்புற செயல்படுத்தினார்.

கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆண்டு பொது விநியோகத்திற்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலைகளின் முத்திரைகளை அழித்து அவற்றை மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்க முயன்ற ஜவுளி உற்பத்தி ஆலையின் ஊழலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளார். [5]
பரிசுகள் / விருதுகள்

2011-ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான மூன்றாவது பரிசினை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா வழங்கினார்சிறந்த ஆட்சியர் பரிசு
எதிர்ப்புகள்

சகாயம் நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது அப்போதைய தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் தி.மு.க.வின் வி.பி.துரைசாமி ஒரு இதழுக்கு சகாயத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேட்டி அளித்தார். இதனை எதிர்த்து சகாயம் துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.[6]

மே 24, 2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து விடுவித்து கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.[7]

சகாயம் கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக இருந்த போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மாற்றப்பட்டார். கோ - ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், தனக்கு அறை ஒதுக்கி தரும்படி, அமைச்சர் கேட்டார். ஆனால் சகாயம், அறை ஒதுக்கினால், அங்கு கட்சிக்காரர்கள் திரள்வர். ஊழியர்கள் பணி பாதிக்கப்படும். எனவே, அமைச்சர் வரும்போது, என் அறையில் அமரலாம்' என, பதில் அனுப்பினார். இதனால் மாற்றப்பட்டார்[8]

விசாரணைக் குழுத் தலைவர்

கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க இவர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் 11 செப்டம்பர் 2014 அன்று உத்தரவிட்டது.[9]

மேற்கோள்கள்

http://www.seythigal.com/?p=4439 சகாயம் ஐ.ஏ.எஸ். இடமாற்றம் [செய்திகள்.காம்]

IAS officer makes assets public (Deccan Herald)

thoduvanam.com (தொடுவானம்.காம்)

 விக்கிப்பீடியாவில் தொடுவானம்

இலவச வேட்டி சேலை முறைகேடு (தட்ஸ்தமிழ்.காம்)

வி.பி.துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு

"சகாயத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்". பார்த்த நாள் மே 24, 2012.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1062780

http://news.vikatan.com/article.php?module=news&aid=32260

வெளி இணைப்புகள்

மக்கள் சேவகர் சகாயம்

உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்

பெப்சி தயாரிப்பு முடக்கம்

உயிரை பணயம் வைத்து மணல் கொள்ளை தடுப்பு

நிலம் திருட்டில் சிக்கிய அரசு அதிகாரி

http://www.hindu.com/2008/10/02/stories/2008100252590300.htm

http://www.hindu.com/2008/08/11/stories/2008081162090300.htm

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி மரம் வளர்க்கும் திட்டம்

கொல்லிமலை தாவரையல் பூங்கா உருவாக்குதல்

கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு 15 தினங்களில் இருப்பிடத்திலேயே சாதிச் சான்றிதழ்

http://www.hindu.com/thehindu/holnus/004200903101113.htm

ரூ1.5 கோடி ஊழல் செய்த பெல்லா சேகர் மீது நடவடிக்கை

அரசு பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற முயற்சிகள்

நாமக்கல்லில் தடுப்பணை மூலம் நீர் ஆதாரம் பெருக்குதல்

http://ta.wikipedia.org/wiki/

0 comments:

Post a Comment

Kindly post a comment.