Sunday, September 28, 2014

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை: தீர்ப்புக்கு ராம்ஜெத்மலானி எதிர்ப்பு



சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையோடு 100 கோடி ரூபாய் அபாரதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் உப்பட பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட தீர்ப்புக்கு மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஊழல் தடுப்பு சட்ட விதிகளின்படி இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அபாராதம் விதித்ததில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதிக் கோட்பாடுகளை மீறிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாக கூறிய அவர் ஜெயலலிதாவுக்கு இந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா நீதித்துறையில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.