ரஷ்யா, வோல்கோகிராட் (முன்னாள் ஸ்டாலின்கிராட்) நகரில் உள்ள ரஷ்ய அன்னையின் சிலை. இது தான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை. இரண்டாம் உலகப்போரில், சோவியத் யூனியன் பெற்ற வெற்றியை நினைவுகூருவதற்காக கட்டப் பட்டது. ஸ்டாலின்கிராட் நகரில் மிகவும் கடுமையான போர் நடந்தது. இருநூறு நாட்கள் நடந்த போரில் அந்த நகரம் முற்றாக நிர்மூலமாக்கப் பட்டது. இறுதியில் ஜேர்மனிய நாஜிப் படைகள் தோற்கடிக்கப் பட்டு, செம்படையிடம் சரணடைந்தன. அதுவே, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு முதல் படியாக அமைந்தது.
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்கள். ஆனால், ஸ்டாலின்கிராட்டில் உள்ள ரஷ்ய அன்னை சிலையின் உயரம் 52 மீட்டர்கள். ஆனால், அமெரிக்க சுதந்திர தேவி சிலை அளவுக்கு, ரஷ்ய அன்னையின் சிலை உலகப் புகழ் பெறவில்லை. எல்லாம் அரசியல்.

கலையரசன்
0 comments:
Post a Comment
Kindly post a comment.