Friday, January 10, 2014

தேர்தல் ஆணையம் கூகுளுடன் இணைந்து செயல்படும் திட்டத்தைக் கைவிட்டது;

பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, வாக்காளர்களுக்கு இணையதளம் மூலம் வாக்குச்சாவடிகளை கண்டறிவது, வாக்காளர் பட்டியல் தகவல்களை அறிந்து கொள்வது, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவது என பல்வேறு வசதிகளை கூகுள் உதவியுடன் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்து இருந்தது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி தேடு தளமாகும்.

தேர்தல் ஆணையத்திடம் உள்ள தகவல்கள் கூகுளுக்கு தரப்பட்டால் அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ. இணையதளங்கள் வாயிலாக ஊடுருவி உலக நாடுகளில் வேவு பார்த்த விவகாரத்தை சுட்டிக்காட்டி நிபுணர்கள் எச்சரித்தனர்.

இதனால் தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்பா, எஸ்.என்.ஏ.ஜய்தி உள்பட அதிகாரிகள் கலந்தாலோசித்து கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் திட்டத்தை கைவிட ஒருமனதாக முடிவெடுத்தனர்.

செய்தி : தினத் தந்தி 

0 comments:

Post a Comment

Kindly post a comment.