Monday, December 2, 2013

புத்தகம் பற்றிய புத்தகம்


ஆசிரியர் : ஜெ. வீரநாதன்
புத்தகம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடையளிப்பதில் தொடங்கி, புத்தகத்தின் அமைப்பு, அதில் உள்ள பாகங்கள், உருவாக்கும் முறை என்பன உள்ளிட்ட புத்தகம் தொடர்பான பல செய்திகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது புத்தகங்களை சேகரித்து வைத்து, பொதுமக்களுக்கு பயன்படும் முறையில் செயல்படும் நூலகம் என்பது பற்றியும், தமிழகத்தில் உள்ள சிறந்த நூலகங்கள் அவற்றின் முகவரி உள்ளிட்டவற்றையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
புத்தகத்தை எழுதும் ஆசிரியர், பதிப்பாளர், விற்பனையாளர் அதனை உருவாக்கும் அச்சு முறை மட்டுமல்லாது பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகள் பற்றியும் செய்திகள் இதில் தரப்பட்டுள்ளன.
புத்தகங்களை அறிமுகம் செய்வதற்காக மட்டுமல்லாது சந்தைப்படுத்துவதற் காகவும் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்படும் புத்தகத் திருவிழாக்கள் பற்றியும், வாசகர்கள் பற்றியும், புதிய புத்தகத்தை எப்படி வாங்குவது என்பதுபற்றியும் தகவல்கள் இதில் உள்ளன.
புதிதாக புத்தகம் எழுதுபவர்களுக்குத் தேவையான, அச்சிடும் முறை, விலை நிர்ணயித்தல், விற்பனை செய்யும் வழிமுறை, புத்தகத்திற்கான சர்வேதச நிலையான புத்தக எண் (ஐஎஸ்பிஎண்) பெறுவதற்கான வழிகள் மற்றும் செயல்பாடுகள், காப்புரிமை என்றால் என்ன, அதனை செயல்படுத்துவது எப்படி போன்ற அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
புத்தகங்களுக்காக உலகளவில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் வழங்கப்படும் பரிசுகள் பற்றிய விவரங்களும், அவற்றிற்கான முகவரிகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளதும், புத்தகங்கள் தொடர்பாக இதுவரையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகள் பற்றிய செய்திகளும் இதில் தரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கனவாகும்.
இதுவரையிலும் இந்திய அளவில் புத்தகங்களுக்காகக் கொடுக்கப்படும் உயரிய விருதுகளான ஞானபீட விருது மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றுள்ளவர்களின் முழுமையான பட்டியலும், தமிழ்நாடு அரசு அரசுடமையாக்கியுள்ள எழுத்தாளர்களின் பட்டியலும் இதில் தரப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால் புத்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தொகுத்துத் தந்துள்ள, தமிழில் வெளியாகியுள்ள முதல் புத்தகம் இதுவேயாகும். இத்தனை செய்திகளையும் கொடுக்கும் இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 275 மட்டுமே.
இதன் ஆசிரியர் ஜெ. வீரநாதன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சுத்துறை, விளம்பரத்துறை மற்றும் புத்தகப் பதிப்புத்துறைகளில் பெற்றுள்ள பட்டறிவின் வெளிப்பாடாக, இரண்டு ஆண்டுகள் உழைப்பில் உருவானதே இந்தப் புத்தகம் பற்றிய புத்தகம் என்ற புதிய நூலாகும். கணினி மற்றும் கணினி வரைகலைத் தொடர்பாகவும் பிற தலைப்புகளிலும் இதுவரையிலும் 28 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இதனை இந்த ஆண்டு உலகப் புத்தகதினமான ஏப்ரல் 23 அன்று (23.04.2013), சென்னை புத்தகச் சங்கமம் நடத்திய புத்தகத் திருவிழாவில் வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
ஜெ. வீரநாதன்
எஸென்ஷியல் ப்ப்ளிகேஷன்ஸ்
கோயம்புத்தூர்
செல்பேசி
: 99444-13782, 98422-13782
மின்னஞ்சல்
: veeranathan@yahoo.com
வலைதளம் : www.veeranathan.com
இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கான பொருளடக்கம் உள்ளிட்ட முதல் 28 பக்கங்களை நமது வலைதளத்தில் கொடுத்துள்ள பீடிஎஃப் கோப்பில் காண்க.

0 comments:

Post a Comment

Kindly post a comment.