கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பத்திரிகையாளர்களைக் கொலை செய்து, இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாக மருத்துவர் இம்ரான் அஹம்மது (எ) இம்மு பாய் துபையில் குடியேறி தலைமறைவாக இருந்து வந்தார். இவர் போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூருவுக்கு வந்திருப்பதாகச்செய்திகள் நிலவின.அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் ( National Investigation Agency ) பெங்களூருவில் வியாழக்கிழமை கைது செய்தனர். சனிக்கிழமையன்று விசாரணைக்காக ஹைதராபாதுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
2012, ஆகஸ்ட் 29-ஆம் தேதி பெங்களூரு ஹுப்ளியில் 12 பேரையும், செப்டம்பர் 2-ஆம் தேதி மேலும் ஒரு நபரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர்..மேலும் சிலர் வளைகுடா நாடுகளில் பதுக்கியிருப்பதாகவும் விசாரணையில் புலப்பட்டது. பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்த வழக்கில் தொடர்புடைய . இவர்கள் அனைவரும் ஆயுதங்களையும், திருடு போன வாகனங்களையும் சேகரித்ததாகவும் கூறப்படுகின்றது. அதன் தொடர்ச்சியே டாக்டர் இம்ரான் அஹம்மது தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

0 comments:
Post a Comment
Kindly post a comment.