Tuesday, December 10, 2013

பிச்சாவரம் ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் இயற்கை எய்தினார்


சிதம்பரத்தைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன்தாரர் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் (62) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபயிற்சி சென்ற போது மயங்கி கீழே விழுந்து தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிதம்பரம் பாவாமுதலியார்தெருவில் ஶ்ரீநடராஜர் கோயிலில் ஜமீனாக முடிசூட்டப்பட்ட பிச்சாவரம் ஜமீன் வாரிசான சிதம்பரநாத சூரப்ப சோழகனார் வசித்து வந்தார். இவருக்கு சாந்திதேவி என்ற மனைவியும், சக்கரவர்த்தி, மன்னர்மன்னன் என்ற இருமகன்களும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைப்பயிற்சி சென்ற போது கீழரதவீதியில் சாலையோரம் மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

காலமான  ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனாருக்கு ஶ்ரீநடராஜர் கோயில் திருவிழாவின் போது பொதுதீட்சிதர்களால்  கவுரவிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருகாலத்தில் தீட்சிதர்கள் பல்லக்கு எடுத்துச் சென்று பிச்சாவரம் ஜமீனிடம் சென்று நடராஜர் கோயில் சாவியை பெற்று வந்ததாகவும்வரலாறுகூறுகிறது.                                                                        

தினமணி -10 - 12 -2013                                                                        

0 comments:

Post a Comment

Kindly post a comment.