Sunday, December 1, 2013

;-மேலாளரின் பேரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய தொழிலாளி


சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாண்டவன் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வெள்ளிக்கிழமை வந்தது.

அந்தக் கடிதத்தை துணைவேந்தர் தாண்டவன், திறந்து படித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தாராம்.

அந்தக் கடித்ததில், தாண்டவன் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், இனி கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் தாண்டவனும், அவர் குடும்பத்தினரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

மேலும் அந்தக் கடிதத்தில் ஜேம்ஸ், பெங்களூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தோடு, ஒரு செல்போன் எண்ணும் எழுதப்பட்டிருந்ததாம். மிரட்டல் கடிதம் தொடர்பாக தாண்டவன், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த மிரட்டல் கடிதத்தையும் போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போனைப் போலீஸார் தொடர்பு கொண்டு பேசினர்.

அந்த செல்போன் எண்ணில் பெங்களூரைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் பேசினாராம். அவர் தான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிவதாகவும், தனக்குக் கீழ் வேலை செய்த சுஜித் என்பவர்தான் இந்த கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும் என்றும், ஏற்கனவே சுஜித் இவ்வாறு பெங்களுரில் இப்படியொரு ஒரு கடிதம் எழுதி, அனுப்பி சிக்கியிருப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாராம்.

சுஜித்தை தான் வேலை நீக்கம் செய்ததினாலேயே தனது பெயரில் மிரட்டல் கடிதம் அவர் அனுப்பியிருப்பதாகவும் ஜேம்ஸ் போலீஸாரிடம் தெரிவித்தாராம். இதையடுத்து போலீஸார் சுஜித்தைத் தேடி வருகின்றனர்.      

நன்றி ;- தினமணி  


0 comments:

Post a Comment

Kindly post a comment.