Saturday, November 30, 2013

குறைகளைத்தீர்த்திட மிஸ்டு கால்களையும் அதிகாரிகள் திரும்ப அழைத்திடல் வேண்டும்



மிஸ்டு கால் வந்தால் திரும்ப அழைத்து குறைகளை கேட்க வேண்டும்
பொதுமக்களின் செல்போன் அழைப்புகளை எடுக்க முடியாதபோது, திரும்ப அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் அனைத்துத் துறைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை செல்போனில் பொதுமக்கள் தொடர்புகொள்ளும் போது, பல்வேறு பணிகளின் காரணமாக அழைப்புகள் தவறவிடப்படுகின்றன.

பொதுமக்கள் மீண்டும் அழைக்கும்போதும் இதே நிலை உள்ளது.
இதனால் பொதுமக்கள் புகார்களைப் பதிவு செய்யவோ, தங்கள் புகார்களின் மீது தக்க நிவாரணம் பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே தவறவிட்ட அழைப்புகளை, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த தொலைபேசி எண்ணில் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டறிய வேண்டும்.

புகார்கள் பதிவு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள், தவறவிட்ட அழைப்புகளுக்கு மீண்டும் அழைத்து பெறப்பட்ட புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை தவறாது பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களின் புகார்களைக் கேட்டு, அவற்றை தீர்ப்பது பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கடமை என்று பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அதிகாரிகள் சிலரின் தொலைபேசி எண்கள்

மக்கள் தொடர்பு அதிகாரி 94451 90944

விழிப்பு மற்றும் காண்காணிப்பு அதிகாரி 94451 90748

மாநகர சுகாதார அதிகாரி 94451 90744

கொசு ஒழிப்பு அதிகாரி 94451 90471

கால்நடை அதிகாரி 94451 90746

திருவொற்றியூர் மண்டல அதிகாரி 94451 90001

மணலி மண்டல அதிகாரி 94451 90002

மாதவரம் மண்டல அதிகாரி 94451 90003

தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி 94451 90004

ராயபுரம் மண்டல அதிகாரி 94451 90005

திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி 94451 90006

அம்பத்தூர் மண்டல அதிகாரி 94451 90007

அண்ணாநகர் மண்டல அதிகாரி 94451 90008

தேனாம்பேட்டை மண்டல அதிகாரி 94451 90009

கோடம்பாக்கம் மண்டல அதிகாரி 94451 90010

வளசரவாக்கம் மண்டல அதிகாரி 94451 90011

ஆலந்தூர் மண்டல அதிகாரி 94451 90012

அடையாறு மண்டல அதிகாரி 94451 90013

பெருங்குடி மண்டல அதிகாரி 94451 90014

சோழிங்கநல்லூர் மண்டல அதிகாரி 94451 90015                                                            

நன்றி ;- தினமணி ,  30 - 11 - 2013



0 comments:

Post a Comment

Kindly post a comment.