பிட் வாசகர்கள் :-photography-in-tamil -pit -பிட் ஆக்கப்பட்டுள்ளது.
புகைப்படக் கலையைக் கற்றுக்கொள்ள ஒரு வலைப்பூ !வணக்கம் பிட் வாசகர்களே,
இன்றைய கட்டுரையில் நாம் Camera RAWவில் கருப்பு & வெள்ளைப் படங்களை உருவாக்குவதில் எழும் சிக்கலையும் அதனை எவ்வாறு தீர்ப்பது என்பதைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்க்கலாம். பொதுவாகவே இன்றும் பல புகைப்படக்கலைஞர்கள் விரும்புவது கருப்பு & வெள்ளைப் படங்களைதான், காரணம் கருப்பு& வெள்ளைப் படங்களில் ஒருவித உணர்ச்சியைக் கொண்டுவர முடியும். படத்தினைக் கொண்டு ஒரு கருத்தைச் சொல்லவிரும்பும் புகைபடக்கலைஞர்களுக்கு கருப்பு & வெள்ளை படங்கள் என்றைக்கும் வரப்பிரசாதமே.
சரி RAWவில் படம்பிடிக்கும் கலைஞர்கள் தங்கள் படங்களை Basic Editing_கை Camera RAW_விலேயே செய்துகொள்வார்கள். Camera RAW வில் கருப்பு & வெள்ளை Conversion காக பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது Convert to Grayscale என்ற ஆப்ஷனைத்தான்.
Reds,Oranges,Yellows,Greens,Aquas,Blues,Purples, and Magentas என
தனித்தனி கலர்களையும் தனியாக கன்ட்ரோல் செய்துகொண்ட பின்னர் படத்தினை
போட்டோஷாப்பிற்கு கொண்டுவந்து Final touch செய்துகொள்வார்கள். இவ்வாறாக
Camera RAW வில் Convert to Grayscale கொண்டு மாற்றப்பட்ட
கருப்பு&வெள்ளை படங்களை போட்டோஷப்பில் கொண்டுவரும்போது போட்டோஷாப்பில்
இருக்கும் Adjustment & New Adjustment Layerல் இருக்கும் சில
ஆப்ஷன்களும் இயங்காது, அதேபோல போட்டோஷாப்பில் இருக்கும் ஒருசில
பில்டர்களும் தனியாக நிறுவியிருக்கும் Plugins களும் இயங்காது.
இதற்கு காரணம் உங்களது படமானது Grayscale mode_க்கு
மாற்றப்டுவதுதான்.போட்டோஷாப்பில் பெரும்பாலான Adjustmentகளும் பில்டர்களும்
மற்றும் Third Party Plugins களும் RGB, மோடில் வேலை செய்யும்படியே
வடிவமைக்கப்படுகிறது.
இதனை சரிசெய்ய போட்டோஷாப்பில் Image>Mode சென்று உங்களது படத்தின் Mode RGB க்கு மாற்றுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்களது போட்டோஷாப்பில் இயங்க மறுத்த அனைத்துபில்டர்களும், Adjustment & Third Party Pluginsகளும் மீண்டும் இயங்கும்.
அன்புடன்,
நித்தி ஆனந்த்
http://photography-in-tamil.blogspot.in
தமிழில் புகைப்படக் கலை -என்ற பெயரில் ஒரு வலைப்பூ இயக்கப்படுகின்றது.
இதன்மூலம் விரும்பும் பொருட்களை விற்கவும் முடியும்; வாங்கவும் முடியும். புகைப்படக் கலைகுறித்த கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டிற்கு ஒரு கட்டுரையின் தலைப்பு, "கர்ப்பு வெள்ளைப் படத்தில் எழும் சிக்கலும் தீர்வும் ".மேலே தரப்பட்டுள்ளது.
இன்றளவும் 6,06,313- பேர் இந்த வலைப்பூவைக் கண்டுகளித்துள்ளனர். 1661 வலைப்பூ அன்பர்களின் நேசத்தைப் பெற்றிருக்கின்றது.
மாதந்தோறும் புகைப்படப் போட்டிகளை நடத்தி வருவதும் இதன் சிறப்பம்சமாகும்.
1302 ஆர்வலர்கள் பின் தொடர்கின்றனர்.
காமிராக்களும் நானும் என்ற கட்டுரையோடு ஜூன், 30, 2007 முதல் இணைய உலகில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கின்றார்,அன்பர், நித்தி ஆனந்த்.
வலைப்பூ செல்க. புகைப்படக் கலையை அறிக. போட்டியிலும் பங்க்கேற்றுச் சிறப்புக்கள் பெறுக.
0 comments:
Post a Comment
Kindly post a comment.