Thursday, November 14, 2013

20 ஆண்டுகளுக்குப்பின் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி !

 சென்னை மெரீனா கடற்கரை
கலங்கரை விளக்கம்
 உதவி : தினத்தந்தி

மெரினா கலங்கரை விளக்கம் 1977–ம் ஆண்டு ஜனவரி 10–ந்தேதி திறக்கப்பட்டது. 1994–ம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காகப்  பொது மக்கள் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டது. 
 
தற்போது சென்னை கலங்கரை விளக்கம் ரூ.1 கோடி செலவில் ‘லிப்ட்’ மற்றும் நவீன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் கப்பல் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல் துறை பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. 
 
நவீனமயம் ஆக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருட்காட்சியகம் ஆகியவற்றைப்  பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடலாம்.. மகாபலிபுரம், கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் கலங்கரை விளக்கங்கள் விரைவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் 12 இடங்களில் உள்ளவை சுற்றுலா மையங்களாக மாற்றப்படும் என்றும் தெரிய வருகிறது...

சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தைச்.  சுற்றிப்பார்க்க கட்டண விபரம் :-சிறுவர்களுக்கு ரூ.5/-, பெரியவர்களுக்கு ரூ.10/- பள்ளி மாணாக்கர்களுக்குக் கட்டணம் கிடையாது. கேமராவுடன் சென்று படம் எடுக்க கட்டணம்25 ரூபாய். அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கும் இதே போன்றும் தனி கட்டணமாக செலுத்த வேண்டும்.

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் பார்வையிடலாம். வாரந்தோறும் திங்கள் விடுமுறைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களைக் கண்காணிக்க  மெட்டல் டிடெக்டரும், கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.  அவசர நேரத்தில் பார்வையாளர்கள் வெளியேற மாற்றுவழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.