இளம் தம்பதியை விவாகரத்துக்குக் கொண்டு சென்ற சிகரெட்
சௌதியில், திருமணமான இளம் தம்பதி ஒன்று, சிகரெட் பிரச்னையால் விவகாரத்து வரை சென்றுள்ளது.
திருமணமாகி மூன்றே மாதமாகும் கணவன், தனது மனைவியின் கைப்பையில் இருந்த சிகரெட்டை ஏதேச்சையாக பார்த்துள்ளார். சிகரெட் பழக்கமே இல்லாத கணவனுக்கு, தனது மனைவிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து, மனைவியும், தனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமே இல்லை என்றும், எனது பையில் சிகரெட் எவ்வாறு வந்தது என்று தெரியவே இல்லை என்றும் மறுத்து விட்டார்.
இதனை ஏற்க மறுத்த கணவன், தற்போது தனது மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் நிற்கிறார்
தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.