Tuesday, November 26, 2013

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் & குற்றவாளிகள்

 ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 346 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். குற்றப்பின்னணி உள்ள 111 வேட்பாளர்களில் 66 பேர் மீது கொடூர குற்றங்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டசபைக்கு வரும் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், முக்கிய எதிர்கட்சியான பாஜவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜ தவிர மாயாவதியின் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் களத்தில் உள்ளன. மொத்தம் 733 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 111 பேருக்கு குற்றப்பின்னணி இருப்பது வேட்பு மனுவில் கொடுத்துள்ள தகவலில் தெரிய வந்துள்ளது. இதில் 66 பேர் மீது கொடூர குற்றங்களுக்கான வழக்குகளில் சிக்கியவர்கள்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 28 வேட்பாளர்கள், பாஜவை சேர்ந்த 31 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் 26 பேர் கிரிமினல் பேக் ரவுண்ட் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பாஜ வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர் கிரிமினல்களாக இருந்தனர். தற்போது இது 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், இந்த முறை மொத்தம் 346 கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 150 பேர் பாஜவை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக காங்கிரசில் 139 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியில் 35 பேர் உள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்வேந்திர சிங் என்பவர் தனக்கு ரூ.119 கோடி சொத்து இருப்பதாக கணக்கு கொடுத்துள்ளார். பாஜவை சேர்ந்த பிரேம் சிங்குக்கு ரூ.88 கோடி சொத்து உள்ளது. சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சஞ்சய் பண்டேலா என்பவர் தனது சொத்து மதிப்பை வெறும் ரூ.5 ஆயிரமாக கணக்கு காட்டியுள்ளார். -

http://www.tamilmurasu.org/

0 comments:

Post a Comment

Kindly post a comment.