நடிகர் “திடீர்’ கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த “திடீர்’ கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். “அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமான அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
நாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனை காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனால் அவர் “திடீர்’ கண்ணையா என்றழைக்கப்பட்டார்.
இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். அயனாவரம் சக்ரவர்த்தி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (நவம்பர் 18) காலை நடைபெறுகிறது.
பி.கு. நடிகர்களை திரைத்துறைச்
செல்வர்கள் என்றும், நடிகைகளைத் திரைத்துறைச் செல்விகள் என்றும்
குறிப்பிடவேண்டும் என்பது சாகித்ய அகாடமி விருது பெற்ற மக்கள் எழுத்தாளர்
ராஜம் கிருஷ்ணனின் விருப்பம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.