Monday, November 18, 2013

சென்னை வந்த அமெரிக்க இழுவை ரயில் என்ஜின்


train

சென்னை மெட்ரோ பணிக்காக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட(துணியால் போர்த்தப்பட்டது)டீசல் ரயில் இன்ஜினை கோயம்பேடு பணிமனையில்கிரேன் மூலம் இறக்கிவைக்கும் பணியாளர்கள்.  உள்படம்: இழுவை டீசல் ரயில் இன்ஜின்.
மெட்ரோ ரயில் சேவையில் அவசர காலம் மற்றும் ஷன்டிங் பணிக்குப் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவில் உருவான டீசல் ரயில் என்ஜின் சென்னை வந்தடைந்தது.

அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் வந்த இந்த ரயில் என்ஜின் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி துரிதமாக நடந்து வருகிறது.

கோயம்பேடு பணிமனையில் இருந்து மெட்ரோ ரயில்களை தேவையான இடங்களுக்கு இழுத்து செல்லவும், சோதனை ஓட்டம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தவும் வசதியாக 700 குதிரை ஆற்றல் படைந்த இந்த ரயில் என்ஜின் டீசலில் இயங்கக்கூடியதாகும். மின்தடை போன்ற அவசரக் காலங்களிலும் பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த டீசல் என்ஜின் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சேவை அடுத்தாண்டு மார்ச்சில் இறுதியில் கோயம்பேடு – பரங்கிமலை இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசிலில் தயாரிக்கப்பட்ட 4 மெட்ரோ ரயில் பெட்டிகள் மே மாத இறுதியில் சென்னை வந்தடைந்தன. மேலும் 2 ரயில்களுக்கான 8 பெட்டிகள் இம்மாத இறுதியில் பிரேசிலில் இருந்து கப்பல் மூலம் சென்னை வரவுள்ளன.

இதுதவிர மேலும் ஒரு இழுவை ரயில் இன்ஜினும் தருவிக்கப்படும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:- தினமணி,18-11-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.