போலந்து நாட்டில் உள்ள சியட்லிஸ்கார் என்ற இடத்தை சேர்ந்தவர் ஹைரோஸ்லாவ் (வயது 38). இவர் தனது குடும்பத்தினரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். பலநாட்களாகியும் அவர் வீடு திரும்பவிலலை. அவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆண் ஒருவருடைய பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது ஹைரோஸ்லாவுடைய பிணமாக இருக்கலம் எனக் கருதி குடும்பத்தினரிடம் போலீசார் காண்பித்தனர். பிணத்தைப் பார்த்த குடும்பத்தினர் அது ஹைரோஸ்லாவ்தான் என்று கூறினார்கள். பின்னர் பிணத்தை வாங்கிச் சென்று அடக்கம் செய்தார்கள். அதில் கல்லறை எழுப்பப்பட்டது.
இந்தக் கல்லறையில் பூஜை நிகழ்ச்சி நடந்தது. அந்த நேரத்தில் ஹைரோஸ்லாவ் அங்கு வந்தார். தனக்குக் கல்லறை கட்டி பூஜை செய்வதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் கல்லறையில் ஏறி நின்று கூச்சல் போட்டார். நான் உயிரோடு இருக்கிறேன். எனக்கு ஏன் கல்லறை கட்டினீர்கள் என்று கோபத்தோடு குடும்பத்தினரிடம் கேட்டார்.
அவரை உயிருடன் பார்த்த ஹைரோஸ்லாவின் தாயார் மயங்கி விழுந்துவிட்டார். இப்போது கல்லறையில் புதைக்கப்பட்டவர் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்..
மாலைமலர் , 28 - 11 -2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.