[ வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013, 07:05.10 AM GMT +05:30 ] | ||
மதுரையை சேர்ந்த சுவப்ணா என்ற திருநங்கைக்கு குரூப்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. | ||
மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த சுவப்ணா என்ற திருநங்கை(23). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அடிப்படை உரிமை வழங்குகிறது. ஆணாகப் பிறந்து பின்னர் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களால் திருநங்கைகளாக மாறும் எங்களை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே திருநங்கைகளுக்கு சமவாய்ப்பு வழங்கும் விதமாக கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் எங்களது பள்ளி சான்றிதழில் ஆண் என்றும் அதன்பின்னர் திருநங்கையானதும் பெண் என்றும் எங்களது ஆவணங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப்-2 தேர்வினை வருகிற டிசம்பர் 1ம் திகதி நடத்துகிறது. பி.ஏ. பட்டதாரியான நான் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். ஆனால், என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்த விபரம் தெரியவில்லை. இதுவரை எனக்கு ஹால் டிக்கெட்டும் வரவில்லை. எனவே குருப்-2 தேர்வில் என்னை பெண் என்ற பிரிவின் கீழ் தேர்வு எழுத அனுமதிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஸ்வப்னாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், சுவப்ணாவின் விண்ணப்பம் குரூப்-2 தேர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 3 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை மனுவுக்கு தமிழக அரசும், டி.என்.பி.எஸ்.சி.யும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 18ம் திகதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளார். நன்றி ;- http://www.newindianews.com |
Thursday, November 28, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.