போலி பாஸ்போர்ட் வழக்கில் அபுசலீமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை நிழல் உலக தாதா அபுசலீம். 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியான இவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கும் உள்ளது.
2001ஆம் ஆண்டு ஐதராபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அபுசலீம், அவருடைய மனைவி, தோழி மோனிகா பெடி ஆகியோரின் பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதற்கு அரசு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்தனர்.
இது தொடர்பாக ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்கு 2002ஆம் ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் அபுசலீம் மீது கிரிமினல் சதி, மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஐதராபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 19ஆம் தேதி அபுசலீமை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அபுசலீமுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து 3 வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமணா நாயுடு உத்தரவிட்டார்.
http://tamil.webdunia.com

0 comments:
Post a Comment
Kindly post a comment.