Wednesday, November 20, 2013

சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அம்மா உணவகம்

800px-GH_Chennaiராஜீவ்காந்தி அரசுப்  பொதுமருத்துவமனை , பார்க் டவுன்  சென்னை – 600 003
GOVT
முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைக்கும்காட்சி

அதிக அளவில் ஏழை, எளிய மக்கள்  வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டு, சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்  5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர்  சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல  சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  அம்மா உணவகத்தை முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  கே.பி. முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்  டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.