Wednesday, November 20, 2013

ஐயப்ப பக்தர்களுக்காகச் சிறப்பு ரயில்கள்

சபரிமலை

சென்னை–கொல்லம் அதிவிரைவு ரெயில்

சென்னையிலிருந்து கோவை வழியாக கொல்லம் செல்லும் சென்னை சென்டிரல்–கொல்லம் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரெயில் (வ.எண்: 06001) நவம்பர்–25, டிசம்பர்–2, 9, 16, 23, 30 மற்றும் 2014 ஜனவரி மாதம் 6, 13, 20 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) சென்னையிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு கொல்லத்திற்கு மாலை 5.45 மணிக்கு சென்றடையும்.
மறுபாதையாக கொல்லத்திலிருந்து புறப்படும் கொல்லம்–சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரெயில் (06002) நவம்பர்–26, டிசம்பர்–3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்கிழமைகளில்) காலை 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் கொல்லத்திலிருந்து சென்னை சென்டிரலுக்கு வரும்போது பெரம்பூரில் நின்று செல்லும்.

நாகர்கோவில்–சென்னை அதிவிரைவு ரெயில்

நாகர்கோவிலில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னை செல்லும் நாகர்கோவில்–சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரெயில் (06310) நவம்பர்–26, டிசம்பர்–3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி–7, 14, 21 ஆகிய தேதிகளில் (செவ்வாய்கிழமைகளில்) நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு காலை 8.50 மணிக்கு வந்தடையும். சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூர்–நாகர்கோவில் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரெயில் (06309) நவம்பர்–27, டிசம்பர்–4, 11, 18, 25 மற்றும் ஜனவரி–1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) காலை 11 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு காலை 6.55 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.

சென்னை–கொச்சுவேலி அதிவிரைவு ரெயில்

கொச்சுவேலியிலிருந்து புறப்படும் கொச்சுவேலி–சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (06316) நவம்பர்–29, டிசம்பர்–6, 13, 20, 27 மற்றும் ஜனவரி 3, 10, 17, 24 (வெள்ளிக்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் கொச்சுவேலியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். மறுபாதையாக சென்னையிலிருந்து செல்லும் சென்னை சென்டிரல்–கொச்சுவேலி வாராந்திர சிறப்பு அதிவேக ரெயில் (06315) நவம்பர்–30, டிசம்பர்–7, 14, 21, 28 மற்றும் ஜனவரி–4, 11, 18, 25 (சனிக்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.50 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயில் கொச்சுவேலியிலிருந்து வரும்போது பெரம்பூரில் நின்று செல்லும்.

கொச்சுவேலி–சென்னை சிறப்பு ரெயில்

கொச்சுவேலியிலிருந்து புறப்படும் கொச்சுவேலி–சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (06318) நவம்பர்–25, டிசம்பர்–2, 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி–6, 13, 20 (திங்கட்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் கொச்சுவேலியிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். மறுபாதையாக சென்னையிலிருந்து செல்லும் சென்னை சென்டிரல்–கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில் (06317) நவம்பர்–26, டிசம்பர்–3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14, 21 (செவ்வாய்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் கோவை, திருப்பூர், சேலம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில் கொச்சுவேலியிலிருந்து வரும்போது பெரம்பூர் நிறுத்தத்தில் நின்று செல்லும்.

மங்களூர்–கொச்சுவேலி சிறப்பு அதிவேக ரெயில்

கொச்சுவேலியிலிருந்து புறப்படும் கொச்சுவேலி–மங்களூர் வாராந்திர சிறப்பு ரெயில் (06304) நவம்பர்–27, டிசம்பர்–4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1, 8, 15, 22 (புதன்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் கொச்சுவேலியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 5.15 மணிக்கு மங்களூரைச் சென்று அடையும். மறுபாதையாக மங்களூரில் இருந்து புறப்படும் மங்களூர்–கொச்சுவேலி வாராந்திர சிறப்பு அதிவேக ரெயில் (06303) நவம்பர்–28, டிசம்பர்–5, 12, 19, 26 மற்றும் ஜனவரி–2, 9, 16, 23 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் மங்களூரிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

இவ்வாறு  தென்னக ரெயில்வே செய்திக்குறிப்பு கூறுகின்றது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.