அந்தக் காலத்துச் சீன வைத்தியம்
இன்று காலையில் வங்கிக்குச் செல்ல வேண்டிய
வேலை இருந்தது. அப்போது அருகிருந்த பெரியவர் ஒருவருடன் பேசிடும்
வாய்ப்புக் கிட்டியது. 84 – வயதுடைய அவர் சொன்ன தகவல் வியப்பினைத் தந்தது.
சீன நாட்டு வைத்தியர் ஒரே வாரத்தில் குணப்படுத்திக் காட்டுகின்றேன் என்று பதில் தர , சிகிச்சையும் தொடங்கியது. தினமும் காலையில் ஒருவேளை சுகர் நோயாளியின் மூக்கை மூடிப் பிடித்துக்கொண்டு , வாய்க்குள் ஒரு மடக்கு மருந்தை ஊற்றியிருக்கின்றனர். சகித்துக் கொள்ளமுடியாத துர்மணமும் சுவையும் கொண்டதாக இருந்தது அந்த நாட்டு வைத்தியர் பயன்படுத்திய மருந்து. ஆனால், வைத்தியர் உறுதியளித்தபடி சுகர் பிரச்சினை முற்றிலுமாக நீங்கிவிட்டது. தற்போது ஸ்வீட்டுகள் எல்லாம் அவரால் தாரளமாகச் சேர்த்துக்கொள்ள முடிகின்றது என்பதும் அவர் கூறியதாகவும் தெரிவித்தார்,.
தனக்குக் கொடுத்த மருந்திற்கான கட்டணமாக வைத்தியர் ரூ.150/- கேட்க , ரூ.500/- ஐக் கொடுத்துள்ளார் மகிழ்ச்சியுடன். மருந்து பற்றி விசாரித்தபோது திரட்டிய தகவல். அடர்ந்த காட்டில் , நெடிது வளர்ந்த மரங்களில் வசிக்கும் ஒரு வகை எறும்புகளை மொத்தமாகப் பிடித்துக் கொண்டு வந்து, நன்கு காயவைத்து,ப் பின்னர் பொடியாகத் தயாரித்துக்கொண்டு அதனுடன் ஒரு பொருளையும் சேர்த்துப் பயன்படுத்துவார்களாம். அந்த எறும்புகள் கொடியவை. கடித்தால் கடித்த பகுதியே துண்டாகிவிடும் என்றும் , உங்கள் இந்தியாவில் அவ்வகை எறும்புகள் கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார், சீனாவைச் சேர்ந்த நாட்டு மருத்துவர். .
0 comments:
Post a Comment
Kindly post a comment.