Wednesday, November 20, 2013

நாட்டு வைத்தியம் : 16 – ஆண்டுகளாக சைக்கிளில் பயணிக்கும் பெண்மணி

8c89a590f56c129bcf3c30
 
Ma Yuhua  is on her way to Luojiahewan village of  Wangtuan town in Tongxin country,

மா யுகா, என்ற பெண்மணி ( Ma Yuhua )  சீனாவில்  12 – வது தேசியக் காங்கிரசில் அங்கம்   வகித்தவர். வடமேற்கு சீனாவின் ஒரு பகுதியான நிங்ஸியா ஹுய் ( Ningxia Hui )  28-02-2013 -ல் சுயாட்சிப் பகுதியானது. மா யுகா கடந்த 16 ஆண்டுகளாக 2464 மக்கள் வசிக்கும் தனது கிராமத்திற்கு  நாட்டு வைத்தியராகச் சேவையாற்றி வருகின்றார். நோயாளிகளின் வீடுகளுக்குச் சைக்கிளில் சென்று பார்ப்பதையே வழக்கமாகிக் கொண்டுள்ளார். இன்றளவும் 16 சைக்கிள்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளார்..

கிராமப்புற மக்களின்  அதிதீவிர நோய்களை எதிர்கொள்ளும் பொது சுகாதாரம் குறித்த மருத்துவப் பயிற்சியை நாட்டுவைத்தியர்களுக்கு அளிக்கவேண்டும் என்பதும், நாட்டு வைத்தியர்களுக்கான ஓய்ஊதியத்தைப் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்பதும் இவர்  காங்கிரஸ் மூலமாக அரசுக்கு வைக்கும் கோரிக்கைகளாகும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.