Wednesday, November 20, 2013

உணர்ச்சியற்ற மாமிசப் பிண்டங்கள்

chennai_airport 
chennai airport

chennai-airport-300x188 
chennai anna airport

நமது தாய்நாடு இந்தியா. நாம் வாழும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. உள் நாட்டுப் பயணங்களுக்கு ஒன்றும், உலகப் பயணங்களுக்கு ஒன்றுமாக சென்னையில் இரு விமான நிலையங்கள் உள்ளன.

உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜரின் பெயர். வெளிநாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயர். திராவிடத்தின் பெயரால்  தமிழ்நாடு நேரடியாக பிரிட்டிஷார்  நிர்வாகத்திற்குட்பட்டே  இருக்கட்டும்  என முயன்றவர்கள் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்ட காரணத்தால் விமான நிலையம் முழுவதற்கும்  அண்ணா பெயரினைச் சூட்டிவிடாமல் மிகவும் பெருந்தன்மையோடு காமராஜருக்கும் வாய்ப்பளித்தனர். தன்னம்மிக்கையற்ற மத்திய அரசும் ஆமாம்சாமி போட்டுவிட்டது.

தமிழகப் போக்குவரத்துத் துறையில் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு , எந்தத் தலைவரின் பெயரையும்  போக்குவரத்துக் கழகங்களுக்குச் சூட்டுவதில்லை என்று முடிவெடுத்தது  தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல். அதே நிலைமை விமான நிலையங்களளுக்குப் பெயர் வைப்பதிலும் வரவேண்டும்.

சென்னை விமான நிலையத்திற்குச் செல்லும் தமிழனுக்குத் திண்டாட்டமே காத்திருக்கின்றது.  ஏனெனில் அங்கு தமிழும் இல்லை; தமிழரும் இல்லை.  எல்லாமே   ” ‘நை நை ” என்பதுதான். காவலர்கள்  எல்லோருமே டெல்லியைச் சேர்ந்தவர்கள் .

அறிவிப்புப் பலகைகளிலும் , பெயர்ப் பலகைகளிலும் தமிழே கிடையாது. அந்தப்  பரிதவிப்புடன் உள்ளே சென்றால் ஆவணங்கள்  சோதனை செய்யுமிடத்திலும் தமிழே கிடையாது.

இந்த விமான நிலையங்களைப் பயன்படுத்தும் தமிழக  எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் எல்லோருமே தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தானே ? பயன்படுத்தும்அரசியல்வாதிகள் அனைவரும் தமிழர்கள்தானே.   அவர்களில் யாருக்கேனும்  ஒருமுறையாவது  இது குறித்த சிந்தனை   ஏற்பட்டிருக்காதா?  வெட்கக்கேடான  விஷயம்.

 பயன்படுத்தும்அரசியல்வாதிகள் அனைவரும் தமிழர்கள்தானே. தாய்மொழி எதுவாக இருந்தாலும்  – பிறப்பிடம் எதுவாக இருந்தாலும் கவலைப்படாது  – வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து விடுவதால்தானே இந்த இழிநிலை.

பணவிடைச்  சீட்டில் தமிழ் வேண்டும் என்று போராடி வெற்றி பெற்ற குமரி அனந்தந விமானத்தில் பயணித்ததே கிடையாதா?

 பழநெடுமாறன், சீமான், வை.கோ. தமிழ் தன்னுரிமையாளர்கள், தனி த்தமிழ் வேண்டுவோர் இதிலும், இவை போன்றவற்றிலும் காலக்கெடு வைத்துப் போராடி வெற்றி பெற்றே தீர வேண்டும்

முக்கியமான பொது இடங்களில், கல்விக்கூடகளில் தாய்மொழி புறக்கணிக்கப்படுவது தமிழகத்தில் மட்டும்தான் .

எனவேதான் இந்த வலைப்பூவின் தலைப்பூ,  “உணர்ச்சியற்ற மாமிசப் பிண்டங்கள்”

0 comments:

Post a Comment

Kindly post a comment.