நீதிமன்றங்களில் பாலியல் தொல்லை தொடர்பான புகாரை விசாரிக்க நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 10 உறுப்பினர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அமைத்தது.
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள இந்த பாலின புகார் தொடர்பான அக விசாரணைக் குழுவில் 6 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரை விசாரிக்கும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்தக் குழு செயல்படும்.
இந்த குழுவில் நீதிபதி மதன் பி. லோகுர், மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ், பேராசிரியர் ஜி. மோகன் கோபால், மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, வழக்கறிஞர் பினா மாதவன், பி.சுனிதா ராவ், மது சவுகான், பாரதி அலி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர் செயலாளராக ரச்னா குப்தா செயல்படுவார்.
தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.