Wednesday, November 27, 2013

கவர்னர்-முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு! -புதன் - 27 நவம்பர்-2013 - 10:31:38 காலை




கவர்னர்-முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு! தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை!!

தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கவர்னருடன்  முதலமைச்சர் ஜெயலலிதா  நேரில் சந்தித்து ஆய்வு அறிக்கையை கொடுத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகை சென்றார்.அவரை வாசலில் கவர்னரின் செயலாளர் ரமேஷ;சந்த் மீனா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். முதல்அமைச்சர் உள்ளே சென்றதும் கவர்னர் ரோசய்யா பொன்னாடை போர்த்தி, மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.
இருவரும் 25 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர்.இந்த சந்திப்பின்போது, முதல்அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் சட்டம்ஒழுங்கு குறித்த ஆய்வறிக்கையை வழங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்தும், அதை சீரிய முறையில் பராமரிக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.தமிழ்நாடு முதல்அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்தார்.முதல்அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் கே.ரோசய்யாவை அவ்வப்போது சந்தித்து, தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்தும், அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைப்பது வழக்கம். அந்த அடிப்படையில், முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை கவர்னர் மாளிகையில் தமிழ்நாடு கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்து எடுத்துரைத்தார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முதல்அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் மாளிகைக்கு சென்றது குறித்து மிகவும் பரபரப்பு ஏற்பட்டது



http://www.tamilantelevision.com/distnews.php?DistId=101

0 comments:

Post a Comment

Kindly post a comment.