பூங்கா இடிப்பில் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழ.நெடுமாறன்
திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்னும் எங்கள் கையில் உள்ளது.
உலகத் தமிழர் பேரவை, நெடுஞ்சாலைத்துறை இடையே 2010ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2013ல் நோட்டீஸ் கொடுத்து பூங்காவை இடித்ததாகச் சொல்கிறார்கள். அப்படி எந்த நோட்டீஸும் எங்களுக்குக் கொடுகக்வில்லை. எந்தக் கட்டடமும் அந்தப் பகுதியில் கட்டவில்லை. அழகிய பூங்காதான் அமைத்திருந்தோம்..
இந்த நடவடிக்கை முதல்வருக்குத் தெரியாமல் நடந்திருந்தால், முதல்வர் இதில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், முதல்வருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்ற பழிச்சொல்லுக்கு அவர் ஆளாக நேரிடும் பூங்கா தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அந்த இடத்தில் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி ,22-11-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.