Saturday, November 16, 2013

வாலிபக் கவிஞர் வாலி இவரது பெரியப்பா !

வாலிபக் கவிஞர் வாலி இவரது பெரியப்பா.இங்கிலாந்தில் எம்.பி.ஏ. முடித்தவர். அடிக்கடி விமானப் பயணம் செய்பவர். ஒருமுறை டைரக்டர் விஜய்யுடன் விமானத்தில் வந்தபோது நடிக்கும் ஆசையை வெளியிட்டதால்,. மதராசப் பட்டணத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது..

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்று நகைச்சுவையும், குணச்சித்திரமும் கலந்த வேடங்களில் நடிக்கவே விரும்புகின்றார்..

இயக்குநர் எழில் இயக்கிய " மனங் கொத்திப் பறவை" படத்திலும் நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மற்றும் ஒரு சில அறிமுக இயக்குநர்களின் படங்களிலும் தற்சமயம் நடித்து வருகின்றார்.

கமல், விக்ரம் மிகவும் பிடித்தவர்கள். நடிப்பதற்குப் பணம் மட்டுமே குறிக்கோளல்ல.  நல்ல நடிகன் என்ற பெயரை ரசிகர்களிடையே பெற வேண்டும். என்பதே இவரது ஆசை. ஹாலோபிளாக், ஜல்லி தொடர்பான வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.

இயற்கையும் காடுகளையும் விரும்புபவர். எனவே, ஆப்பிரிக்கா பிடிக்கும் என்கின்றார்.

வாராணாசி புனித நகரம் என்று கூறும் இவர், அதனால். ஆண்டிற்கொருமுறை  அங்கு சென்று  திரும்புவதை  வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.

 பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் விரும்பிச் சாப்பிடும் பழக்கம் இருப்பதால் வெளிநாடுகளுக்குச் செல்லும்பொழுது உணவு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை என்றும் கூறுகின்றார்.

3 வருடங்கள் நண்பர்களாக இருந்தும், இரண்டு ஆண்டுகள் காதலித்தும்  அம்பிகாவைத் திருமணம் செய்துகொண்டதை வெளிப்படையாகக் கூறி மகிழ்கின்றார்.

 பெரியப்பா வாலியைப்பற்றிக் கேட்டபோது, " தலையில் நரை விழுந்தும் சிந்தனையில் நரை விழாத கவிஞர், அவர். அவரைப் பார்த்துப் பிரமிப்புத்தான் உண்டாகும். காதலை எழுதிய அவரது கரங்கள் , இராமானுஜ காவியத்தையும் படைத்தது. படித்துப் பார்த்துத் தெளிவாயிருக்கிறேன். "ஐ.லவ் பெரியப்பா" என்று  கூறி வாலியின்பால் உள்ள அன்பை வெளிப்படுத்துகின்றார்.

 இவரது பெயர் எம்.ஆர். கிஷோர். திரைத்துறையில் நடிகராகத் தன் பயணத்தையும் துவக்கியுள்ள இவருக்கு நல்ல எதிர்காலம் அமைந்திட   வலைப்பூ அன்பர்கள் எல்லோரும் வாழ்த்துவோம் .

பி.கு. எம்.ஆர்.கிஷோர் குறித்த பேட்டி நவம்பர் மாத பாவையர் மலரில் வெளியாகியிருந்தது.. அதன் தொகுப்பே இந்த வலைப் பதிவு.

நன்றி :- பாவையர் மலர் - pavaimathi@yahoo.com , mwccvm@yahoo.com                                                                                                                 




.







0 comments:

Post a Comment

Kindly post a comment.