Friday, November 29, 2013

6000 - ஆண்டுகள் பழைமையான மது இந்தியாவில் விற்பனைக்கு ....

இந்தியாவில், மீண்டும் விற்பனைக்கு வரும் 6000 ஆண்டு பழமையான ரிக் வேத மதுபானம் ‘மீட்


வில்னியஸ்: சுமார் 6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உலகின் பழமையான மதுபானம் இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய வேத நூல்களில் ஒன்றான ‘ரிக்' வேதத்தில் தேன் மது எனப்படும் பழமையான ஆயுர்வேத மதுபானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காலஓட்டத்தில் காணாமல் போன இந்த மதுபானம் தற்போது மீண்டும், அதன் தாயகமான இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதன் முதல்கட்டமாக, அடுத்தமாதம் டெல்லியில் நடைபெற உள்ள உணவுக் கண்காட்சியில் இந்த மதுபானம் இடம்பெற உள்ளது.

மீட் பானம்....

சுமார் 6,000 ஆண்டுகள் பழமையான இப்பானம், தற்போதும் ‘மீட்' என்ற பெயரில் லிதுவேனியா நாட்டில் பாரம்பரிய பானமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. லிதுவேனியாவில் இப்பானத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

உணவுக் கண்காட்சி....

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உணவுக் கண்காட்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்திய சமையல் காலண்டரின் ஆண்டுவிழா நிகழ்ச்சியான இதில் இந்தியாவில் செயல்பட்டு வரும் பால்டிக் வர்த்தக மையம் இந்தப் பழமையான மதுபானத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆயுர்வேத மதுபானம்...

தேன், தண்ணீர், ஈஸ்ட், மூலிகைகள் மற்றும் காய்கறிகளின் சுவை ஆகியவற்றின் கலவை தான் இந்த ஆயுர்வேத மீட் பானம். இதனை வரும் 2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டுவர வர்த்தக மையம் திட்டமிட்டுள்ளது.

காப்புரிமை...

கடந்த 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ராணி இரண்டாம் எலிசபெத் லிதுவேனியா நிறுவனத்திற்கு காப்புரிமை அளித்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைட்டமின் சத்துக்கள்....

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டிலும் குறைந்திருந்த இதன் தயாரிப்பு 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் உயரத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது வெளிவரும் இந்த பானம் வைட்டமின் சி சத்துகள் கலந்து தயாரிக்கப்படுகின்றது.

தேன் மது....

பல நூறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மது பானத்தின் சூத்திரங்கள் தற்போது மறைந்து போனபோதிலும், இப்பானத்திற்கான அடிப்படைப் பொருள் இயற்கையில் கிடைக்கும் தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in

0 comments:

Post a Comment

Kindly post a comment.