Thursday, November 28, 2013

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு :அனைவரும் விடுதலை !




மிக மிக பரபரப்பான
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு :
சங்கரராமன் கொலைவழக்கில் அனைவரும் விடுதலை

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் இன்று இந்த மிக மிக பரப்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கூறியுள்ளது. ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.  போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி முருகன் அனைவரையும் விடுதலை செய்தார்.


சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன், 2004 செப்., 3ல், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி, ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 25 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

 வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட ரவி சுப்ரமணியன், அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2005 முதல், புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், ஆறாவது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கதிரவன், 40, என்பவர், மார்ச் மாதம், சென்னை, கே.கே.நகரில், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மீதமுள்ள, 23 பேர் மட்டும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு, இன்று வழங்கபட்டதால்,  குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 23 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். இதன் காரணமாக, புதுச்சேரி கோர்ட் வளாகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது.

இத்தனை பாதுகாப்பு, பரபரப்புக்கு மத்தியில் அனைவரும் விடுதலை என்று மிகமிக பரபரப்பான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது புதுச்சேரி அமர்வு நீதிமன்றம்.                                                                     

 நன்றி :- தினகரன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.