Sunday, October 6, 2013

வருவாய் அலுவலகம் இடிப்பு: அம்பத்தூரில் பரபரப்பு !


அம்பத்தூரில் வருவாய் அலுவலகம் தவறுதலாக இடிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாடியிலிருந்து திருநின்றவூர் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக சுமார் 22 கி.மீ நீளத்துக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த வியாழக்கிழமை (அக்.3) முதல் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணி பாடியிலிருந்து அம்பத்தூர் ரயில்வே நிலையம் வரை 10 கி.மீ தூரம் முடிவடைந்துள்ளது.

கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகில் அம்பத்தூர் தாலூகாவின் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.

இங்கு வழக்கம் போல, வாரிசுச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, சாதிச்சான்றிதழ் உட்பட பல்வேறு அரசு சான்றிதழ் பெற சனிக்கிழமை காலை ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டு வந்த ஜேசிபி இயந்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடத்தின் முன்பகுதியை இடித்து தள்ளியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் வெளியில் வந்து அரசு அலுவலகம் என்று கூச்சலிட்டனர்.

நிலைமையை உணர்ந்த நெடுஞ்சாலைத்துறையினர் இடித்த தினமணி பகுதியை கட்டித்தருவதாக சமாதானம் பேசினர். அதன்படி சனிக்கிழமை இரவு சேதமடைந்த பகுதியைநெடுஞ்சாலைத்துறையினர்சீரமைத்துக்கொடுத்தனர்.  

தினமணி, 06-10-2013     . 


0 comments:

Post a Comment

Kindly post a comment.