Sunday, October 6, 2013

புத்தூரில் கைதானவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் !

மதுரை முதல் புத்தூர் வரை

 புத்தூரில் தீவிரவாதிகள் தங்கியிருந்த 

வீட்டைச் சூழ்ந்த பொதுமக்கள்

கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 28: மதுரை திருமங்கலம் அருகே தரைப்பாலத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு பறிமுதல்.

2013 ஏப்ரல் 7: கர்நாடக மாநிலம் பெங்களுரில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு. 11 போலீஸார் உள்பட 16 பேர் காயம்.

ஜூலை 1: வேலூரில் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் வெட்டிக் கொலை

ஜூலை 19: சேலத்தில் பாஜக பிரமுகரும் ஆடிட்டருமான ரமேஷ் வெட்டிக் கொலை.

ஜூலை 21: ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் கொலை வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி உத்தரவு.

ஜூலை 24: தேடப்படும் குற்றவாளிகளான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோரைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என டி.ஜி.பி. அறிவிப்பு.

அக்டோபர் 4: சென்னை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் இந்து இயக்க நிர்வாகியை கொல்ல திட்டமிட்டு யானைக்கவுனியில் காத்து நின்ற போலீஸ் பக்ருதீன் கைது.

அக்டோபர் 5: புத்தூரில் பதுங்கியிருந்த பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் கைது. -12 மணிநேரப் போராட்டத்திற்குப்குப்பின்.                            

தினமணி, 06-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.