Thursday, October 10, 2013

ஆசியான் அமைப்புக்கு இந்தியா சார்பில் புதிய தூதுவர் ?




ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்க டாருஸ்ஸலாம் நகருக்கு புதன்கிழமை வந்த பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்சரண் கௌரை வரவேற்கும் புரூனே மன்னர் ஹசனல் போல்கியா, அவரது மனைவி பென்கிரன் அனக் சலேஹா. 
இந்தியாவுக்கும் ஆசியான் எனப்படும் கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்புக்குமான உறவுகளை வலுப்படுத்துவதற்கு புதிய தூதரை நியமிக்கும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை புரூனே வந்து சேர்ந்தார். அவர், 11ஆவது இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டிலும் 8ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் வியாழக்கிழமை கலந்து கொள்ள உள்ளார். அதைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் பயணம் மேற்கொள்கிறார்.

புரூனேவில் பிரதமர் தங்கியிருக்கும்போது, ஆசியான் தலைவர்களுடன் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்பட இருதரப்பு மற்றும் பிராந்திர விவகாரங்கள் குறித்து விவாதிப்பார். ஆசியான் அமைப்புடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புவதால் அதற்கான புதிய அறிவிப்புகளை பிரதமர் அறிவிப்பார். இந்த அமைப்புக்கு இந்தியா சார்பில் புதிய தூதரகம் மற்றும் தூதரை அவர் அறிவிக்க உள்ளார்.

இந்தப் புதிய தூதரகம் இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்தாவில் அமைக்கப்படும். அங்குதான் ஆசியான் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, நாளந்தா பல்கலைக்கழகம் தொடர்பாக 6 கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா சார்பில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும்                                                                             

தினமணி, 10-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.