Thursday, October 3, 2013

சீனா- பாக்- நாடுகளிடம் இழந்த எல்லைகளை மீட்டுத்தர இன்னொரு நேதாஜி வருவாரா ?

1943-ஆம் ஆண்டு ன்அக்டோபர் 21 இந்தியர்களின் வாழ்வில் முக்கியமான நாள். அன்றுதான் நேதாஜி தலைமையில் கிழக்காசிய நாடுகளில் உள்ள இந்தியப் போராளர்களின் மாநாடு நடந்தது.

மாநாட்டில் கைராட்டைச் சின்னமுள்ள மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. சிங்கப்பூரே மூவர்ணக் கொடிகள் பறந்தன. INA -என்ற தேசிய இராணுவப்படை அணிவகுத்து நின்றது. நேதாஜி எழுச்சி உரை ஆற்றினார்.

இந்தியாவிற்கான தற்காலிக அரசைப் பிரகடனம் செய்தார். தாஷ்மகாரி போஸ் தலைமை ஆலோசகர். தெசபக்தி மிக்க கீழ்க்கண்ட உறுதிமொழியை ஏற்றார்.

" எனது தாய்நாட்டின் விடுதலைக்காக இப்புனிதப்போரை உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரையில் நடத்தி வருவேன் என ஆண்டவன் சாட்சியாக உறுதிமொழி ஏற்கிறேன். எப்போதும் பாரத நாட்டின் தொண்டனாகவே இருப்பேன், பாரத நாட்டின் சகோதர சகோதரிகளின் நலங்களைக் காப்பதே எனது முழு முதற் கடமை. சுதந்திரம் அடைந்த பின்னரும் பாரதத்தைக் காப்பதற்காக எனது உடலில் உள்ள கடைசிச் சொட்டு இரத்தத்தையும் சிந்தத் தயாராக இருப்பேன்" என்று முழங்கினார்.

அவர் அமைத்த புதிய அரசை ஜப்பான், பர்மா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. கிழக்காசிய நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தன.

நேதாஜியின் புனிதப்போருக்கு ஆதரவாக 30000 பேர் திரண்டனர். 7000 பேர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கக்கூடிய 4 பயிற்சிக்கூடங்கள் மலேயாவில் இருந்தன. ஜான்சி ராணி படை, கேப்டன் லட்சுமி  என்னும் தமிழ் மகள் தலைமையில் நிறுவப்பட்டது.

இந்திய தேசியப்படையினை காந்தி, நேரு, அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் வாழ்த்தினர். ஆனால் விதி அவரை முடித்து வைத்தது.

இன்று சீனாவும், பாகிஸ்தானும் நமது எல்லைகளைக் கடந்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டு நகர மறுக்கின்றன.

சுதந்திரத்திற்குப்பின் நாம் இழந்த பெரும் நிலப்பரப்புகள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?

எல்லைகளை ஆக்கிரமிப்புச் செய்தோரிடமிருந்து மீட்க இன்னுமொரு நேதாஜி தேவை . கிடைப்பாரா?

கட்டுரை உதவி :- எஸ்.வி.ராஜ சேகர், அமுதசுரபி, அக்டோபர் 2013

.

0 comments:

Post a Comment

Kindly post a comment.