Tuesday, October 15, 2013

போருளாதாரம் :- 3 அமெரிக்கர்களுக்கு நோபல் பரிசு




அமெ​ரிக்​கா​வைச் சேர்ந்த லார்ஸ் பீட்​டர் ஹான்​சென்,​​ யூஜீன் ஃபாமா மற்​றும் ராபர்ட் ஷில்​லர் ஆகி​யோர் பொரு​ள​தா​ரப் பிரி​வில் இந்த ஆண்​டுக்​கான நோபல் பரி​சுக்கு தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டுள்​ள​னர்.​

மூல​த​னச் சந்​தை​யின் போக்​கு​க​ளைப் புரிந்​து​கொள்​வ​தற்கு அவர்​கள் அளித்த வழி​காட்​டு​தல்​க​ளுக்​காக இந்த விருது வழங்​கப்​ப​டு​வ​தாக நோபல் பரி​சுக்​கான நடு​வர் குழு தெரி​வித்​துள்​ளது.​

""சொத்​து​க​ளின் தற்​போ​தைய மதிப்​பு​க​ளைப் புரிந்​து​கொள்​வ​தற்கு இவர்​கள் அடித்​த​ளம் அமைத்​துத் தந்​துள்​ள​னர்.​ இவர்​க​ளது வழி​காட்​டு​தல்​கள்,​​ ஒரு வகை​யில் சந்தை அபா​யங்​க​ளின் மாறு​ப​டும் போக்கு மற்​றும் அபா​யங்​களை அணு​கும் போக்கு ஆகி​வற்​றைச் சார்ந்​தும்,​​ இன்​னொரு வகை​யில் சந்தை குறித்த கண்​மூ​டித்​த​ன​மான நம்​பிக்​கை​கள் மற்​றும் சந்​தைக்கு பாதிப்பை ஏற்​ப​டுத்​தும் அம்​சங்​க​ளைச் சார்ந்​தும் சொத்​துக்​களை மதிப்​பி​டத் துணை புரி​கின்​றன'' என்று இவர்​க​ளைத் தேர்ந்​தெ​டுத்த ராயல் ஸ்வீ​டன் அறி​வி​யல் கழ​கம் தெரி​வித்​துள்​ளது.​

ஆல்​பி​ரட் நோபல் தனது உயி​லில் குறிப்​பி​டா​மல் வழங்​கப்​ப​டும் ஒரே நோபல் பரி​சான பொரு​ளா​தா​ரத்​துக்​கான பரிசு 1969-ஆம் ஆண்​டு​மு​தல் வழங்​கப்​பட்டு வரு​கி​றது.​ ஸ்வீ​டன் நாட்​டின் மத்​திய வங்கி தனது 300-வது ஆண்​டு​வி​ழா​வில் இந்​தப் பரிசை அறி​மு​கப்​ப​டுத்​தி​யது.​

கடந்த பத்து வரு​டங்​க​ளாக இந்​தப் பரி​சைப்​பெற்ற 20 பேரில்,​​ 17 பேர் அமெ​ரிக்​கர்​கள்.​ சென்ற ஆண்டு அமெ​ரிக்​கா​வின் ஆல்​வின் ரோத் மற்​றும் லாயிட் ஷாப்​லே​வுக்கு பொரு​ளா​தா​ரத்​துக்​கான நோபல் பரிசு வழங்​கப்​பட்​டது.​
1998-ஆம் ஆண்டு இந்​தி​யா​வைச் சேர்ந்த அமர்​தியா சென் இந்​தப் பரி​சைப் பெற்​றார் என்​பது குறிப்​பி​டத் தக்​கது.

லார்ஸ் பீட்​டர் ஹான்​சென்​

60 வய​தான இவர்,​​ சிகாகோ பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பேரா​சி​ரிய​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​ நோபல் பரி​சுக்கு முன்​ன​தாக 2010-இல் பி.பி.வி.ஏ அறி​வு​ஜீ​வி​கள் விருது,​​ 2008-இல் சி.எம்.ஈ குழு​மப் பரிசு,​​ 2006-இல் நெம்​மர்ஸ் பரிசு ஆகி​ய​வற்றை இவர் வென்​றுள்​ளார்.​

யூஜீன் ஃபாமா​

ஏற்​கெ​னவே பொரு​ளா​தா​ரத்​துக்​கான ஜெர்​மன் வங்கி பரிசு,​​ மோர்​கன் ஸ்டான்லீ விருது ஆகி​ய​வற்​றைப் பெற்​றுள்ள யூஜீன்,​​ 1939-இல் பிறந்​த​வர்.​ இவ​ரும் சிகாகோ பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பேரா​சி​ரிய​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​

ராபர்ட் ஷில்​லர்​

அமெ​ரிக்​கா​வின் கனெட்​டி​கட் மாகா​ணத்​தி​லுள்ள யேல் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் இவர் பேரா​சி​ரி​ய​ரா​கப் பணி​பு​ரிந்து வரு​கி​றார்.​ 2009-இல் பொரு​ளா​தா​ரத்​துக்​கான ஜெர்​மன் வங்​கிப் பரி​சைப் பெற்​றுள்ள இவ​ருக்கு ​ வயது 67.

தினமணி :- 15-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.