Sunday, October 6, 2013

1909 -இலிருந்து இங்கிலாந்து பாராளுமன்றம் தொடர்ந்து நடத்தும் பத்திரிகை !





பாராளுமன்றமே பத்திரிகை நடத்துவது என்பது அநேகமாக இங்கிலாந்து

பாராளுமன்றம் நடத்துவது ஒன்று மட்டுமே இருக்க முடியும். சுமார் நூறு

பக்கங்களில் வெளியாகும் இப் பத்திரிகையின் பெயர் ஹன்ஸôர்டு.

பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள், கலகலப்பு, கைகலப்பு, பேச்சுகள்,

கூக்குரல்கள் எல்லாவற்றையும் மிகவும் சுவையாகத் தரும் பத்திரிகை இது.

இப்பணிக்காக இருபத்து நான்கு சுருக்கெழுத்தர்கள் பாராளுமன்ற

நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து செய்திகளைத் தருகிறார்கள்.

அவர்கள் தரும் செய்திகளை கொஞ்சம் கூடக் குறையாமல் எந்த

சம்பவத்தையும் விடாமல் பிரசுரிக்கிறார்கள். இப் பத்திரிகை 1909 ஆம்

ஆண்டிலிருந்து தடைபடாமல் வெளி வருகிறது.                                                           

ஞாயிறு கொண்டாட்டம் ,தினமணி, 06-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.