Tuesday, September 17, 2013

ஆதி பகவு - திருவள்ளுவர் கண்ட தொடர் விளக்கம்


Image

Image

ஆதி பகவு - திருவள்ளுவர் கண்ட தொடர் விளக்கம்

எழுவாய் வேற்றுமை :- ஒருவன் பெயர் கந்தன். அவன் தந்தை பெயர் சிவன். அவனைச் சிவ கந்தன் என்போம்.

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை : பிள்ளைத்தாய்ச்சி என்பதுபோல ஆதியை உடைய பகவு

மூன்றாம் வேற்றுமைத் தொகை :- 'அம்மையப்பன்' என்பது 'அம்மையோடு அப்பன் ' என்று பொருள்படும். அதுபோல் ஆதியோடு பகவன் என்ற பொருள்படும்.

நான்காம் வேற்றுமைத் தொகை :- ஆதிக்குப் பகவன் என்று ஆகும்.'ஆதிமூலம்' 'பிதாமகன்' ( இயேசு ) 'அல்லா நபி' என்பன போல் பொருள் முடிபு கொள்ளும். நன்நூல் கூறுவது போல உறவு, கொடை, நட்பு, திசை முதலான பொருள்களையும் இதனோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஐந்தாம் வேற்றுமைத் தொகை. 'ஆலம் விழுது' போல ஆதியிலிருந்து பகவு என்று பொருள் காணலாம்.

ஆறாம் வேற்றுமைத் தொகை :- 'என் கண்' என்பதுபோல் "ஆதியில் பகவு என்று பொருள் முடிபு காணலாம்.

ஏழாம் வேற்றுமைத் தொகை :- 'மரத்தில் பூ' என்பது போல் 'ஆதியில் பகவு' என்று பொரிஉள் முடிபு காணலாம்.

விளி வேற்றுமை :- 'ஆதியே! பகவனே !' உம்மை முதலாக உடையது உலகம் என்று பொருத்திக் கொள்ளலாம்.

உம்மைத் தொகை :-கபிலர் பரணர் என்பதுபோல ஆதியும் பகவனும் என்று கொள்ளலாம். சேர சோழ பாண்டியர் என்பது உயர் திணையில் உம்மைத் தொகை.'வெற்றில பாக்கு ' என்பது அஃறிணையில் உம்மைத் தொகை. திருமந்திரம் 'ஆதி பிரான்' என்று வழங்குவது அஃறிணை முடி[பு. (104 )

இருபெயரொட்டுப் பண்புத்தொகை :-கண்ணபிரான்' என்பது போன்றது. கண்ணன் வேறு பிரான் வேறு அன்று. அதுபோல் ஆதி வேறு பகவு வேறு அன்று. முல்லைப்பூ என்பது இதன் அஃறிணை முடிபு.

உவமைத் தொகை :- 'கார் குழல்' ( மேகம் போன்ற கூந்தல் ) என்பது போல் முதன்மைத் தன்மையில் 'ஆதி பகவன் எனலாம்'

வினைத் தொகை :-ஆதிய, ஆதி, ஆதும் பகவன் என்றும் விரிக்கலாம்.'ஆகு' என்னும் தன் வினைக்கும் 'ஆக்கு' என்னும் பிரிதின வினைக்கும் பொதுவான தொழில் பெயர். ஆதல்., 'அறம் ஆகிய பொருள் மூன்று' என்றும், மீன் ஆதி கடல் வாழ் உயிரினம் என்றும், 'ஆஅதும் (ஆதும் ) என்னுபவர் ( குறள் 653 ) என்றும் வழக்கில் உள்ளதை ஒப்பு நோக்கிக் கொள்ளலாம்..

அன்மொழித் தொகை:- 'தேன் மொழி வந்தாள். என்னும்போது தேன்மொழி அன்மொழித் தொகை. "தேன்மொழியாள்" என்றால் பண்பாக்கப் பெயர். 'ஆதி பகவு' என்பது ஆதியையோ பகவனைஒயோ உணர்த்தாமல் இரண்டும் சேர்ந்துள்ள இன்றைய, இறைவனை உணர்த்தும்போது அன்மொழித்தொகை. ஆதிபகவன் என்பது பண்பாக்கப் பெயர்.

சித்தர் அல்லது சித்தப் பார்வை :- ஆதி என்பது உயிர். பகவு என்பது உடல். உயிரானது உடலை அவாவும். உடலோடு சேரும். உடலுக்கு உதவும். உடலிலிருந்து விலகும். உடலின் உடைமையாகக் கிடக்கும். உடனேஅகத்தும் புறத்தும் ஊறியும், ஏறியும் உலவும்.அதுபோலப் பகவில் அதி தமிழில் எட்டு வேற்றுமை நில்லைகளையும் கொண்டிருக்கும்.

விஞ்ஞானப் பார்வை :- ஆதி என்பது அண்டம் ( UNIVERSE ) பகவு என்பது பிண்டம். அல்லது
அணு ( ATOM ) புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என்பவை அணுவுக்குள் சுழலும் உருப்பொருள்கள். குப்வார்சு, போச்சான், ல்லெப்டான் என்பன அவ்வுருப்பொருள் வெளிவரும். ஆற்றல்கள் என்றெல்லாம் காண்பது விஞ்ஞானப் பார்வை. PROTON, NEWTRON, ELECTRON, QUARK, BOSON, LEPTON.

மெய்ப்பொருள் பார்வை :- நான்கு திசைகளும் நான்கு கோணங்களும் சேர்ந்து எட்டுத் திசைகள். மேல் நோக்கிய திசை, கீழ் நோக்கிய திசை இரண்டையும் சேர்த்தால் பத்து முனைகள். 10 குறளும் 10 முனைகள்.


ஆதியின் பத்து முனைகளாவன.:-

01. பகவு

02. அறிவு

03. இயக்கம்

04. அவா

05. பொருள்

06. உணர்வு

07. ஒக்கமும் ஒடுக்கமும்

08. அறம்

09. குணம்

10. பிறவி

----என்று பத்து குறள்களில் காட்டப்பட்டுள்ளமை எண்ணிப் பார்த்தால் எளிதாகப் புலப்படும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சித்தர் வழியில் செங்கைப் பொதுவன் பாடிய 120 பாடல்கள் தொடர்ந்து பகுதி பகுதியாக இடம்பெறும்.

தெய்வ அலை-தெய்வீக அலை- முழுமையும் rssairam.blogspot.com, sankaravadivu.blogspot.com

வலைப்பூக்களிலும், அவற்றிற்கான டிவிட்டர்களிலும் இடம்பெற்றுள்ளன. பலர் படித்துப் யன்பெறவேண்டும்

என்பதே நோக்கம். கருத்துக்களை rssairam99@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.

புத்தகம் வேண்டுவோர் முகவரியையும், அலைபேசி எண்ணையும் குறித்தனுப்பினால் கையிருப்பு உள்ளவரை

இலவசமாக அனுப்பிவைக்கப்படும். தஞ்சையிலிருந்து வந்த கடிதத்தின்படி 5 பிரதிகள் அனுப்பப் பட்டுள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தெய்வம் இருப்பது எங்கே ? அது இங்கே என்பதுதான் மையக் கரு. மறுக்க முடியாத ஆதாரங்க்களுடன் தகவல்கள். 27 பக்கங்களில் அடங்க்கியுள்ளன. இந்நூலைப் படித்தால் தெய்வம்-ஊழ் முதலான கற்பனைகளுக்குத் தக்க பதில் கிடைத்துவிடும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தெய்வ அலை - தெய்வீக அலை
சித்தர் வழியில்
செங்க்கைப் பொதுவன்
புலவர், M.A.M.Ed.Ph.D.
வீடு 22, தெரு 13, தில்லை கங்கா நகர்,
சென்னை-600 061
-----------------------------------------------------
கிடைக்குமிடம்
வசந்தா பதிப்பகம்
மனை எண் 9, கதவு எண் 26, ஜோஸப் குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை-600 088
-----------------------------------------------------------------
தொலைபேசி எண் 044- 2253 0954, 2353 3667
------------------------------------------------------------------
27-பக். ரூ.5/-
----------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

Kindly post a comment.