Monday, September 16, 2013

புராண விளையாட்டுகள்

காளமேகப் புலவர்

பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் பெருமாள்
இருந்த இடத்தில் சும்மா இராமையால் ஐயோ
பருந்து எடுத்துப் போகின்றதே.

முருகன்

அப்பன் இருந்துண்ணி ஆத்தாள் மலை நீலி
ஒப்பரிய மாமன் உறுதிருடி சப்பைக்கால்
அண்ணன் பெரு வயிறன் ஆறுமுகத் தானுக்கு
என்ன பெருமை இது.

குறிப்பு : முருகனின் தந்தை பிச்சைக்காரன். தாய் ஒரு மலைப் பேய். தாய் மாமன் வெண்னெய் திருடி. அண்ணன் வவுத்தன் ஆறுமுகத்தானுக்கு ஊர்வலம் அடுக்குமா ?

சிவம்

காலனையும் காமனையும் காட்டு சிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ - சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நதரே  நீர் திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால்.

குறிப்பு: திருச்செங்க்கட்டாங்க்குடியில் உள்ள சிவனே ! எமனையும், காமனையும், சிறுத்தொண்டரின் மகனையும் கொன்ற பழியானது , நாட்டை விட்டுக் காட்டுக்குப் போய்விட்டால் உனக்கு நீங்க்கிவிடுமா? செங்காட்டாங்குடி முப்புரம் எரித்த தீயால் செம்மைப்பட்ட சுடுகாடு சிறுத்தொண்டர் சோற்றுக்ம்கொடை வழங்கிக் கொண்டு வாழ்ந்த ஊர் அது. நாடு x காடு

மதுரை மீனாட்சி

நல்லதொரு புதுமை நாட்டிற் கண்டேன் அதனை
சொல்லவா சொல்லவா சொல்லவா -தொல்லை
மதுரை விக்கினேச்சுரனை மாமதுரை ன்யான் பெற்றான்
குதிரை விற்க வந்தவனைக் கூடி.

குறிப்பு : குதிரைக்காரனைக் கூடி ஆனையைப் பெற்றாள். மாணிக்க வாசகருக்குக்காகச் சிவபெருமான் மதுரையில் பாண்டிய மன்னன் முன்பு குதிரை விற்க வந்தார், நரியைப் பரியாக்கினார்.

முக்கூடற் பள்ளு

'முக்கூடற் பள்ளு' என்று ஒரு நூல் . பள்ளன் நூலின் தலைவன். அவனுக்கு இரண்டு மனைவியர். மூத்தவள் முக்கூடற் பள்ளி, முறைப் பெண். திருமணம் செய்து கொண்டவள் திருமாலை வழிபடும் குடியில் பிறந்தவள். இளையவள் மருதூர்ப்பள்ளி. பள்ளனின் ஆசை மனைவி. சிவனை வழிபடும் குடியில் பிறந்தவள்.இருவருக்கும் மனக் கசப்பு. ஒருவரையொருவர் ஏசிக்கொள்கின்றனர்.மாற்றாள் வழிபடும் தெய்வத்தை இழுத்து ஏசிக் கொள்கின்றனர். குறிப்பு: மூ- மூத்தபள்ளி. இ-இளையபள்ளி

,மூ     :- சுற்றிக்கட்ட நாலுமுழத் துண்டுமில்லாமல்-புலித்
          தோலை உடுத்தான் உங்கள் சோதி யல்லோடி  
               
இ.        கற்றைச் சடை கட்டிமர உரியும் சேலைதான் - பண்டு
          கட்டிக் கொண்டாள் உங்கள் சங்கக் கையன் அல்லோடி

குறிப்பு : இராமன் மரவுறி தறித்துக் காட்டிற்குச் சென்றது.

மூ.        நாட்டுக்குள் இருந்து பசிக்கு ஆற்றமாச்சாமல் -வாரி
           நஞ்சையெல்லாம் உண்டான் உங்கள் நாத நல்லோடி

இ.         மாட்டுப் பிற கே திரிந்து சோத்துக் கில்லாமல்-வெறும்
           மண்ணை யுண்டான் உங்கள் முகில் வண்ணன் னல்லோடி

மூ.        ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் மாட்டில்
           ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி.

இ         வீறு சொன்ன தென்ன மாடு தானுமில்லாமல் பட்சி
           மீதிலேறிக் கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி.

தெய்வ அலை - தெய்வீக அலை
சித்தர் வழியில்
செங்கைப் பொதுவன்
புலவர், M.A.M.Ed.Ph.D.
வீடு 22, தெரு 13, தில்லை கங்கா நகர்,
சென்னை-600 061
-----------------------------------------------------
கிடைக்குமிடம்
வசந்தா பதிப்பகம்
மனை எண் 9, கதவு எண் 26, ஜோஸப் குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை-600 088
-----------------------------------------------------------------
தொலைபேசி எண் 044- 2253 0954, 2353 3667

0 comments:

Post a Comment

Kindly post a comment.