Sunday, August 18, 2013

உலோகக் கருவிக்குப் பதில் கறையும் ஸ்க்ரூ !





சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ஒரு செய்தி சொன்னார். ஒருவருக்கு எதிர்பாராமல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. மயங்கிவிழுந்து விட்டார். டாக்டர்கள் தலையை எம்.ஆர்.ஐ. ஸ்கான் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

ஸ்கான் செய்யக் கொண்டுபோன போது, அவர்கள் கேட்ட சில கேள்விகளில் ஒன்று: இவருக்கு செயற்கை மூட்டு அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாகச் சொல்கிறீர்களே, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது டைடானிய உலோக ஸ்க்ரூ பயன்படுத்தியிருக்கிறார்களா? இல்லையா என்று தெரியுமா? எனக் கேட்டிருக்கிறார்கள்.

உடன் சென்றவர்கள், ஆமாம், உலோக ஸ்க்ரூவை தோள்பட்டை மூட்டில் வைத்து முடுக்கியிருக்கிறார்கள் என்று பதிலளித்தனர். அப்படியானால் ஸ்கான் எடுக்க முடியாது என்று அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

அவருடைய தோள்பட்டையில் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வலிக்காக, அவருக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துவிட்டு, உலோக ஸ்க்ரூவை வைத்து செயற்கை மூட்டைப் பொருத்தியிருக்கிறார்கள். ஆனால் அதுதானே

சரியானது வேறென்ன வழி இருக்கிறது? என்று கேட்கலாம்.

 மருத்துவத் துறையில் ஏற்படும் மாறுதல்களையும், புதிய வரவுகளையும், புதிய தகவல்களையும் நோயாளிகள் அறிந்துகொள்வதில்லை. ஏன், மருத்துவர்களேகூட சில புதிய தொழில் நுட்பங்களை அறிந்திருப்பதில்லை. அதனால் ஏற்படும் நேரம் மற்றும் பண இழப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். கூடுதல் அவதிப்படுவது நோயாளிதானே!


 இப்போது முழங்கால், கணுக்கால், தோள்பட்டை ஜாயின்டுகளில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வோருக்கு, உலோகத்தால் ஆன ஸ்க்ரூ இணைப்புகளைத்தான் அறுவைச் சிகிச்சையின்போது வைக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்கான் மூலம் பார்த்துவிட்டு மீண்டும் ஸ்க்ரூவை மாற்ற வேண்டும். அதாவது, இரண்டாவது சர்ஜரிக்குத் தயாராக வேண்டும். அது ஒரு கூடுதல் செலவு என்றால், அப்போது ஏற்படும் இன்பெக்ஷனுக்கு மருந்துகள் சாப்பிட்டாக வேண்டும். அது இன்னொரு செலவு. மருத்துவமனை செலவு வேறு.


 முழங்கால் மற்றும் மூட்டுகளில் இப்போது வைக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது டைடானிய இணைப்பு இருந்தால், உங்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை பின்னர் ஏற்படுமானால், அதைச் செய்ய முடியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இவை எலும்புக்குக் கூடுதல் அழுத்தம் வேறு கொடுக்கின்றன.


 இந்த உலோக ஸ்க்ரூவுக்குப் பதிலாக, இப்போது புதிதாக நவீன ஸ்க்ரூ வந்துவிட்டது. இந்தியாவிலேயே நான்கு ஆண்டுகளாகக் கிடைக்கவும் செய்கிறது.

இந்த (கண்ணாடி போன்ற) ஸ்க்ரூ அல்லது பின் சிறிது காலத்துக்குப் பின் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் முழுதுமாகக் கரைந்துவிடும். அப்படிக் கரைவது வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறிவிடும் ( மல்ட்டிபிள் ப்ராக்சர் எனப்படும் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் இந்த நவீன ஸ்க்ரூவைப் பயன்படுத்த முடியாது.)


 "எப்படி உடலோடு கரைந்துபோகிறது?'


 என்று கேட்கலாம். இந்த ஸ்க்ரூ 4ஆவது ஜெனரேஷன் தயாரிப்பு. இதை டகஎஅ -பாலி லாக்டிக் கிளைகோலிக் ஆசிட் தயாரிப்பு என்கிறார்கள். அதனால்தான் உடலோடு கரைந்துபோய் வெளியேறிவிடுகிறது.


 குழந்தைகள் கைகளிலும் கால்களிலும் அதிகமாக அடிபட்டுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு பீடியாட்ரிக் சர்ஜன்கள் இந்த பிஎல்ஜிஏ பின்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். சிரிஞ்சால் ஊசி குத்துவது போல், இதைக் குறிப்பிட்ட பகுதியில் செலுத்திவிடுகிறார்கள்.

 ஊசி போய் அங்கே உட்கார்ந்து கொண்டுவிடுகிறது சுந்தரம் மெடிகல் பவுண்டேஷன் டாக்டர் சுதாகர் வில்லியம்சும், ஹண்டே ஹாஸ்பிடல் டாக்டர் அழகப்பனும் இதைப் பயன்படுத்துவதாகக் கூறினார்கள். இதை விற்பனை செய்யும் சென்னை நிறுவனத்தின் அதிகாரி எஸ். ரமேஷ்.


 இந்த ஆக்டிவா-ஸ்க்ரூ மற்றும் ஆக்டிவா-பின் இப்போது இந்தியாவில் முதன்முதலாகக் கிடைக்கிறது. வேறு யாரும் தயாரிப்பதில்லை. இது பின்லாந்து நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவானது. இதை பயோ-அப்சார்பபிள் இம்ப்ளான்ட் என்கிறார்கள். இதை அமெரிக்க மருந்துஉணவுக் கட்டுப்பாட்டுத்துறை அங்கீகரித்திருக்கிறது.

 அமெரிக்காவில், ( PROFESSION AT EDUCATIONAL RESRARCH INSTITUTE ) பிஎல்ஜிஏ நூறு சதவிகிதம் இணைப்பில் உதவுகிறது, எந்தப் பிரச்னையும் எழுப்புவதில்லை என்றும், அதிகமான நோயாளிகள் இதனால் திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்றும் அறிவித்திருக்கிறது.

 மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த ஆக்டிவா-ஸ்க்ரூ மற்றும் பின் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன்.

 இப்போது தமிழ் நாட்டிலும் புழக்கத்துக்கு வந்துவிட்டது. ராணுவத்தில் சேரும் இளைஞர்கள், தாங்கள் மூட்டு சிகிச்சை பெறும்போது இந்த உறிஞ்சிக்கொள்ளக்கூடிய (அப்சார்பபிள்) ஆக்டிவா ஸ்க்ரூவைத்தான் போடச்சொல்கிறார்களாம்.

நன்றி ,:- சாருகேசி, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 18 -08- 2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.