Sunday, August 18, 2013

குன்னூர் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை !




குன்னூர், ரன்னிமேடு அருகே ஹில் குரோவ் ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள்.
மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் சனிக்கிழமை ராட்சத பாறை விழுந்ததால், 2 நாள்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு நாள்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் ரன்னிமேடு, ஹில் குரோவ் ரயில் பாதையில் பாறை விழுந்திருப்பதாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்பிச் சென்றது.

தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், நவீன இயந்திரங்களின் உதவியுடன் பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 நாள்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்கப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராட்சத பாறை விழுந்ததால் 50 மீட்டர் அளவிலான ரயில் பாதை சேதமடைந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மேலும் சில பாறைகள் விழும் நிலையில் உள்ளன. இதனால் இப்பாறைகளை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன

நன்றி :-தினமணி, 18 -08-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.