Monday, August 5, 2013

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற 8 விதிமுறைகள் நிறைவேறக்கூடும் !


01. பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு  குழந்தை இல்லாத தம்பதியரின் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும் செயற்கை முறை கருவாக்க மையங்கள் , அரசின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்படும்.

02. வியாபாரம் போன்று  வாடகைத்தாய் முறை பயன்படுத்துவது தடுக்கப்படும்.

03. வாடகைத்தாய்மார், அவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

04. தங்கள் சொந்தக் குழந்தைகள் உட்பட தொடர்ந்து 3 குழந்தைகள் பெற்றவர்கள் வாடகைத்தாயாகச் செயல்பட தடை விதிக்கப்படும்.

05. இரண்டு பிரசவங்களுக்கு இடையே  வாடகைத் தாய்மார்கள் குறைந்தது 2 ஆண்டு காலம் இடைவெளி விடுவது கட்டாயமாக்கப்படுகிறது.

06. 21 - வயதுக்குட்பட்டோர்களும் , 35 - வயதுக்கு அதிகமானோர்களும் வாடகைத் தாயாகச் செயல்பட முடியாது

07. வெளிநாட்டுத் தம்பதியர் இந்தியாவில் வாடகைத்தாயை அமர்த்த நிபந்தனைகள் விதிக்கப்படும்.

08. இந்தச் சட்டத்தை மீறிச் செயல்பட்டால்  அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

 இந்த  கட்டுப்பாடுகளைக் கொண்ட  சட்ட மசோதா  விரைவில் மத்திய மந்திரி சபையில் வைக்கப்படும். மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் பெற்ற பிறகு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி :- தினத்தந்தி, 05 - 08 - 2013  

0 comments:

Post a Comment

Kindly post a comment.